வெள்ளி, 13 டிசம்பர், 2019

திறமைசாலி... புத்திசாலி... இதில் நீங்கள் யார்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

இது சிரிப்பதற்கான நேரம்...!!
தருண் : உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!
பாபு : ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிற வேலை...!
தருண் : 😝😝
------------------------------------------------------------------------------------------------
பல் மருத்துவர் : உங்க பல் எப்படி உடைஞ்சுது?
கணவர் : என் பொண்டாட்டி செஞ்ச சப்பாத்தி கல்லு மாதிரி இருந்துச்சு டாக்டர்.
பல் மருத்துவர் : கல்லு மாதிரி இருக்குதுன்னு தெரியுதுல. அப்புறம் ஏன் சாப்பிட்டீங்க..?
கணவர் : அத சாப்பிடாததுனாலதான் டாக்டர் பல்லு உடைஞ்சது.
பல் மருத்துவர் : 😳😳
---------------------------------------------------------------------------------------------------------------
கணவர் : கூட்டுல உப்பு அதிகமா இருக்கு...
மனைவி : உப்பு சரியாதான் இருக்கு... காய்தான் கொஞ்சம் கொறஞ்சு போச்சு, காய் நெறயா வாங்க சொன்னா எங்க கேக்குறீங்க.....
கணவர் : 😧😧
---------------------------------------------------------------------------------------------------------------

கணவர் : ஏம்மா... ஒரு செருப்பு எடுக்குறதுக்கு, போட்டிருக்கிற செருப்பு தேயுற அளவுக்கு நடக்க வைக்குறியே...
மனைவி : செருப்பையாவது நல்லா செலக்ட் பண்ணலாம்னுதான்...
கணவர் : 😲😲
---------------------------------------------------------------------------------------------------------------

தேவி : உடம்பு நல்லாதான இருக்கு... அப்புறம் ஏன் பிச்சை எடுக்குற?
பிச்சைக்காரன் : முடிஞ்சா தர்மம் போடுங்க... சும்மா உடம்ப பாத்து கண்ணு வைக்காதீங்க...
தேவி : 😑😑
---------------------------------------------------------------------------------------------------------------

வங்கி அதிகாரி : ஹலோ.. நீங்க காருக்காக லோன் வாங்கிருக்கீங்க. தவணை கட்டாததால, நாங்க கார எடுத்துக்கிட்டு போறோம்..
கடன் வாங்கியவர் : இப்படி நீங்க செய்வீங்கன்னு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கி இருப்பேனே!
வங்கி அதிகாரி : 😂😂
---------------------------------------------------------------------------------------------------------------
இதில் நீங்கள் யார்?
மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் புத்திசாலி...

வாங்கி கொடுக்கிறேன்னு சொல்லியே சமாளிப்பவன் திறமைசாலி...
---------------------------------------------------------------------------------------------------------------
முடியலடா சாமி...!!
குத்தியவுடன் ஏன் ரத்தம் வருது?
குத்தியது யாருன்னு பாக்கத்தான்...😜
---------------------------------------------------------------------------------------------------------------

விஷய ஞானத்தோடு நல்லா பேசுறீங்களே...
பேசாம நீங்க பெரிய பேச்சாளரா ஆகிடலாம்.
பேசாம எப்படிங்க பேச்சாளரா ஆக முடியும்.?😋
---------------------------------------------------------------------------------------------------------------

காகம் ஏன் தண்ணீரில் மூழ்குவது இல்லை?
அது கரையுமே... அதான்...😉

போட்டோகிராபி தொழிலில் முன்னேற அவசியமானது எது?
திறமையா? அதிர்ஷ்டமா?
ரெண்டுமே இல்ல... கேமராதான்...😇

குறளும்... பொருளும்...!
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

பொருள் :

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை, புகழும் இல்லாதவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்