Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஏப்ரல், 2020

அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து... இதுதான்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

கொஞ்சம் சிரிங்க பாஸ் !!

பாபு : என்னங்க வாசல்ல உட்கார்ந்து பைனாகுலர் வெச்சு பாத்துக்கிட்டு இருக்கீங்க?
ராமு : தூரத்துச் சொந்தக்காரங்க வர்றாங்களான்னு பாக்குறேன்.
பாபு : 😩😩
--------------------------------------------------------------------
தாத்தா : அந்த காலத்துல உன் வயசுல நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா, வீட்டுக்கு வரும்போது பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன் தெரியுமா..
பேரன் : இப்ப அப்படியெல்லாம் முடியாது தாத்தா... எல்லா கடையிலையும் நிறைய CCTV கேமரா வெச்சிருக்காங்க.
தாத்தா : 😝😝
--------------------------------------------------------------------
மருத்துவர் : நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்துச்சா.....?
நோயாளி : பாட்டிலை காலி பண்ணிக்கூட பாத்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்ல...
மருத்துவர் : 😱😱
--------------------------------------------------------------------
வீட்டுக்காரர் : (திருடனைப் பாத்து) ஐய்யைய்யோ, ஐய்யைய்யோ... என் பணம், நகையெல்லாம் திருடுறானே?
திருடன் : யோவ்! சத்தம் போட்டனா போலீஸ்ல சொல்லி முட்டிக்கு முட்டி தட்டச் சொல்லிடுவேன்!
வீட்டுக்காரர் : 😳😳
--------------------------------------------------------------------
ஏன்? ஏன்?....

1. போர்வீரன் சாவதேன்? சாம்பார் மணப்பதேன்?

2. குப்பை தேங்குவதேன்? குழந்தை அழுவதேன்?

3. வானில் சத்தம் கேட்பதேன்? அரிசி மாவாய் ஆவதேன்?

விடைகள் :

1. பெருங்காயத்தால்.

2. எடுப்பாரற்று.

3. இடிப்பதால்.
--------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!

🌟 வாசிப்பு பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.
ஒருமுறை சுவைக்க பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

🌟 நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம்.
ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

🌟 அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்று விடும்.

🌟 தவறு நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக