Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 ஏப்ரல், 2020

உங்களின் மிக முக்கியமான மூலதனம்... படித்ததில் பிடித்தது... - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
நீதிபதி : நகையை திருடுனதுக்கு உன் மேல தொடரப்பட்ட வழக்குல நீ குற்றவாளி இல்லன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்.
குற்றவாளி : அப்படீன்னா திருடிய நகையை நானே வெச்சுக்கட்டுமா சாமி?
நீதிபதி : 😠😠
---------------------------------------------------------------------
மகன் : அப்பா... எனக்கு செல்போன் வேணும்பா...
அப்பா : படிக்கிற வயசுல உனக்கு எதுக்குடா செல்போன் வாங்கித் தரணும்?
மகன் : சரி, அப்ப நான் படிக்கல. செல்போன் வாங்கிக் கொடுங்க.
அப்பா : 😏😏
---------------------------------------------------------------------
லதா : அந்த சயின்டிஸ்ட் கூட ஓடிப்போனியே ஏன் டி திரும்ப வந்துட்ட?
கீதா : அவன், அதை சோதனை ஓட்டம்னு சொல்லிட்டான்டி..
லதா : 😂😂
---------------------------------------------------------------------
நகுல் : வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, போர்டுக்கு பதிலா டீ-சர்ட்ல Tolet-னு எழுதி வாசல்ல தொங்க விட்டது தப்பாப்போச்சு.
தாமு : ஏன், என்னாச்சு?
நகுல் : எவனோ ஒருத்தன் அந்த டீ-சர்ட்டை எடுத்துக்கிட்டு, அதுக்கு பதிலா அவனோட அழுக்கு பனியன்ல Thanks-னு எழுதி மாட்டிட்டுப் போயிட்டான்.
தாமு : 😇😇
---------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!!
🌟 அறிவு என்பது சிறகைப் போன்றது. அந்த சிறகைக் கொண்டு நாம் சொர்க்கத்திற்கே பறந்து செல்லலாம்.

🌟 அவசரத்தால்தான் தவறுகள் உண்டாகின்றன. எதையும் நிதானமாக செய்வதன் மூலம் எந்த சமயத்திலும் அது உண்டாவதில்லை.

🌟 காலம்... விலைக்குக் கிட்டாது. விரும்பியும் திரும்பாது.

🌟 அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டு வரும்.

🌟 எளிமையாக இருங்கள். எளிமைதான் உண்மையாக வாழ கற்றுக்கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்கு தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில்தான் அடங்கி இருக்கிறது.
---------------------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு.

விளக்கம் :

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
---------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!

கோபம் கொள்வது எந்த மனிதனும் செய்யக்கூடிய எளிய செயல்...
ஆனால் சரியான நேரத்தில், சரியான நபரிடம், சரியான காரணத்திற்காக
கோபப்படுவது எளிய செயல் அல்ல...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக