>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 7 மே, 2020

    விடாமுயற்சி... புன்சிரிப்பு... யாரிடம் கற்பது? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    இது சிரிப்பதற்கான நேரம்...!!

    தந்தை : டேய்! எப்பவுமே நம்மளவிட வயசுல பெரியவங்கக்கிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?
    மகன் : ஏம்ப்பா! அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?
    தந்தை : 😖😖
    -----------------------------------------------------------------------
    நீதிபதி : வீட்டுக்கு ரெய்டு பண்ண வந்தவங்கக்கிட்ட ' குற்றவாளி : என் 'சொத்தை" யெல்லாம் காட்டச் சொன்னாங்க.. அதான்.
    நீதிபதி : 😩😩
    -----------------------------------------------------------------------
    யாரிடம் கற்பது?

    விடாமுயற்சியை கடல் அலைகளிடமும்...

    கடமை தவறாமையை கதிரவனிடமும்...

    உத்வேகத்தை காட்டாற்றிடமும்...

    புன்சிரிப்பை பூக்களிடமும்...

    சுறுசுறுப்பை எறும்புகளிடமும்...

    சேமிப்பை தேனீக்களிடமும்...

    பொறுமையை பூமியிடமும்...

    கருணையை கடவுளிடமும் கற்றுக்கொள்...
    -----------------------------------------------------------------------
    குறளும்... பொருளும்...!!

    பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லா தார்.

    விளக்கம் :

    நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளை, கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.
    -----------------------------------------------------------------------
    சொல்லோடு விளையாடலாம்..!

    🌟 ஆபத்தான சிட்டி - எலக்ட்ரி 'சிட்டி".

    🌟 அதிர்ஷ்டம் இல்லாத நகரம் - லக்'னோ".

    🌟 தொங்க விட முடியாத திரை - கு'திரை".
    -----------------------------------------------------------------------
    சிந்தனை துளிகள்...!

    👉 அறிவுமிக்க செயல்கள் பெரும் சாதனையாக மலரும்.

    👉 பொறுமைதான் வலிமையுள்ள முயற்சியின் உச்சம்.

    👉 பிறர் உங்களைப் பற்றி நல்ல எண்ணம் கொள்ள வேண்டுமானால் அமைதியாக இருங்கள்.

    👉 மனசாட்சி அழைக்கும் பாதையில் வளர்ந்தவர்கள் கனவை பின்பற்றுவதில்லை.

    👉 நல்ல நட்பிற்கு, திறந்த மனப்பான்மை போதும்.



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக