நோயாளி
: எதுக்கு டாக்டர் மூச்ச இழுத்து விட சொல்றீங்க?
டாக்டர்
: இல்ல ஆப்ரேஷனுக்கு அப்பறம் மூச்சு விட முடியாது... அதுதான்...
நோயாளி
: 😳😳
-------------------------------------------------------------------------------------------------------------------
பாபு
: ஏன்டா இவ்ளோ சோகமா இருக்க?
சோமு
: என் மனைவி ஒரு மாசம் என்கூட பேச மாட்டேன்னு சொல்லிட்டா டா...
பாபு
: அப்போ அதுக்கு நீ சந்தோஷம் தானடா படணும்... ஏன் வருத்தப்படுற?
சோமு
: அந்த ஒரு மாசம் இன்னையோட முடியுதுடா...
பாபு
: 😂😂
-------------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர்
: என்னங்க எக்ஸ்ரேல உங்க வயிற்றில் நிறைய சின்னச் சின்ன ஸ்பூனா இருக்கு?
நோயாளி
: நீங்க தானே டாக்டர் தினமும் ரெண்டு ஸ்பூன் சாப்பிட சொன்னீங்க...
டாக்டர்
: 😩😩
-------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி
: நீங்கதான் என்னோட புருஷனா வரப் போறீங்கன்னு ஸ்கூல்ல படிக்கும் போதே மிஸ்
சொல்லிட்டாங்க....
கணவன்
: அப்படியா..! ஆச்சர்யமா இருக்கே...!!
மனைவி
: ஆமா..!! நீயெல்லாம் பெரியவளாகி பன்னி மேய்க்கத்தான் லாயக்குனு சொல்லுவாங்க..!!
கணவன்
: 😏😏
-------------------------------------------------------------------------------------------------------------------
மன்னன்
: மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?
மந்திரி
: மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில் சொல்லிட்டான்.
மன்னன்
: நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே..!!
மந்திரி
: அதைத்தான் சொல்லிட்டான்.
மன்னன்
: 😬😬
-------------------------------------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
ஒருநாள்
சிறுத்தை பசியுடன் உணவை தேடியது. அப்போது ஒரு கருப்பு மானையும், ஒரு புள்ளி
மானையும் கண்டது. அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை
மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்திற்கு அருகே சென்றது. ஆனால் எந்த மானைத்
தாக்குவது? என அது முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த
மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரே இடத்தில் இடது வலது
பாதைகளில் ஓடின. சிறுத்தை அந்த இடத்திற்கு வந்தது. எதைத் துரத்தலாம் என்று தயங்கி
நின்றது. பிறகு, சரி... கருப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக
இருக்கும் என்று முடிவு செய்து கருப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால்
அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது. உடனே சிறுத்தை, அது வேகமாக ஓடக்கூடிய
மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகிவிட்டது. சரி... புள்ளி மானைப்
பிடிக்கலாம் என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ
பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.
தருணத்தின்
முக்கியத்துவத்தை அறிந்து முடிவை விரைவாக எடுக்க வேண்டியது அவசியம்.
-------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கைத் தத்துவங்கள் !!
பணக்காரன்
ஆக வேண்டுமா?
அதற்குப்
பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை.
தேவைகளைக்
குறைத்துக் கொள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக