இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பெண்கள்
பலருக்கும் இன்று இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றுதான் ஒல்லியான புருவம்.
முகத்திற்கு அழகு சேர்ப்பது கண்களும், கண்களுக்கு மேலேயுள்ள புருவமும்தான்.
பெண்கள் புருவத்தை தங்களுக்கு தகுந்த மாறி
வடிவமைத்து மேலும் தங்களை அழகாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் சிலருக்கு புருவம்
அடர்த்தியாக இல்லாமல் ஒல்லியாக இருக்கும்.
அப்படிப்பட்ட ஒல்லியான புருவம் உங்களுக்கும்
இருக்கிறதா..? கவலைய விடுங்க.. கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால்
நீங்களும் அடர்த்தியான புருவத்தைப் பெறலாம்.
தேங்காய் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயில் முடி வளர்ச்சியை அதிகரிக்க
உதவும் வைட்டமின் ஈ, லாரிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.
இரவு நேரத்தில் சில துளி தேங்காய் எண்ணெயை
எடுத்து புருவத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் அப்படியே
விட்டுவிடவும்.
மறுநாள் காலை, வெது வெதுப்பான நீரில் முகத்தை
கழுவ வேண்டும். இவ்வாறு சில மாதங்கள் தொடர்ந்து இதை செய்து வந்தால் புருவத்தில்
உள்ள முடி அடர்த்தியாக வளரும்.
வெங்காயச் சாறு :
வெங்காயம் முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.
வெங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடென்டுகள் மற்றும் சல்பர் அதிகம் உள்ளது. இது முடி
வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய மினெரல் ஆகும்.
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, புருவத்தில்
இந்த சாறை தடவி நன்றாக மசாஜ் செய்து, காயும் வரை அப்படியே விடவும். காய்ந்தபின்
குளிர்ந்த நீரால் கழுவவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒரு மாதம் தொடர்ச்சியாக
இதை செய்வதன் மூலம் விரைவில் முடி அடர்த்தியாகும்.
விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணெய், புருவ முடிகளின் வேர்க்கால்களை
புத்துணர்ச்சி அடையச் செய்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
ஒரு பஞ்சை எடுத்து விளக்கெண்ணெயில் நனைத்து,
புருவத்தில் தடவி, விரல் நுனியை கொண்டு 2-3 நிமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
முப்பது நிமிடங்களுக்குப் பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு
தினந்தோறும் இரவு படுப்பதற்கு முன் ஒரு முறை இதைச் செய்யலாம்.
முட்டையின் மஞ்சள் கரு :
முடி வளர்ச்சிக்கு முட்டையின் மஞ்சள் கருவிலுள்ள
வைட்டமின் டி மற்றும் சல்பர் பயன்படுகிறது. இது முடி ஆரோக்கியத்திற்கு நல்லது.
முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியே எடுத்து,
அதை நன்றாக அடித்துக் கொள்ளவும். பின், ஒரு பஞ்சை இதில் நனைத்து புருவத்தில் தடவி,
20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
வாரத்திற்கு இரண்டு முறை என தொடர்ந்து இதை
செய்து வந்தால் அடர்த்தியான புருவ முடிகளைப் பெறலாம்.
ஆலிவ் எண்ணெய் :
தேங்காய் எண்ணெயை போலவே ஆலிவ் எண்ணெயையும்
புருவத்தின் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். சில துளிகள் ஆலிவ் எண்ணெயை எடுத்து
புருவத்தில் தடவி, நன்றாக மசாஜ் செய்யவும். இரவு முழுதும் அப்படியே விட்டுவிடவும்.
மறுநாள்
காலை, வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதனை செய்வதால் நல்ல
பலன் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக