-------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
-------------------------------------
பாபு : சார்! நகை கடன் கிடைக்குமா?
சீனு : நகை கொண்டு வந்திருக்கீங்களா?
பாபு : என்கிட்ட நகை இல்லையே...
சீனு : அப்ப நகை கடன் கிடைக்காது.
பாபு : அப்ப நகை வாங்க கடன் கொடுப்பீங்களா?
சீனு : 😳😳
-------------------------------------
ராமு : என்னப்பா இது?... நாள் பூரா இப்படி ஆபீஸ்ல வேலை பாக்காம உட்கார்ந்துக்கிட்டு இருக்க?
ராஜா : நான் என்ன சார் பண்றது? ஒரு டாக்டர் சாப்பாட்டுக்குப்பிறகு ஒரு மணி நேரம் வேலை செய்யக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு. இன்னொரு டாக்டர் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிட சொல்லியிருக்காரு.
ராமு : 😠😠
-------------------------------------
படித்ததில் பிடித்தது...!!
-------------------------------------
கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே. அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும். ஆனால் மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும்.
கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயர பறக்கத் துவங்கும். உயரம் கூட கூட காகம் சுவாசிக்க கடும் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் குறைந்து கீழே விழுந்து விடும்.
உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள். மாறாக உங்கள் உயரத்திற்கு அவர்களை இழுத்துச் செல்லுங்கள் ஒருநாள் தானாகவே காணாமல் போய்விடுவார்கள்.
நீங்கள் கழுகா? அல்லது காகமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
-------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------
1. ஒற்றைக்கால் பந்தலில் ஊரெல்லாம் தங்கலாம். அது என்ன?
விடை : ஆலமரம்.
2. முரட்டு மனிதனுக்கு முப்பத்திரண்டு பேர் காவல். அது என்ன?
விடை : நாக்கு.
3. நடந்தால் நடக்கும், நின்றால் நிற்கும். அது என்ன?
விடை : நிழல்.
-------------------------------------
குறளும்... பொருளும்...!!
-------------------------------------
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.
-------------------------------------
விளக்கம் :
-------------------------------------
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவது அறமல்ல என்பதை உணர்ந்து செயல்படும் அறிஞர்களை செல்வம் தேடி சேரும்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக