Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

துலாம் ராசியில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். மேஷத்தில் உச்சம் பெற்ற சூரியன் துலாம் ராசியில் நீசம் பெறுகிறார். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் ஏற்படும் பலன்கள் பின்வருமாறு :

எதிர்பாலின மக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்பட்டாலும் அவர்களால் சில மனக்கசப்புகள் நேரிடலாம்.

மனோபலம் குறைவாக இருக்கும்.

எதையும் செய்து முடிக்கும் திறமை கொண்டவர்கள்.

குழப்பமின்றி தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள்.

இறை நம்பிக்கையும் சாஸ்திரங்கள் மீது மிகுந்த ஈடுபாடும் கொண்டவர்கள்.

மரியாதை இருக்கும் இடத்திற்கு மட்டும் செல்லக்கூடியவர்கள்.

பிறரின் தன்மை அறிந்து அதற்கேற்றார் போல் பழகக்கூடியவர்கள். பிரச்சனைகளில் அமைதியான முறையில் தீர்வை எதிர்பார்க்கக்கூடியவர்கள்.

சொகுசான வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

எண்ணங்களால் அவ்வப்போது உடல் நலம் பாதிக்கப்படும்.

தாயின் மீது மிகுந்த அன்பு உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக