>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 14 ஜூலை, 2020

    உங்கள் கவலை மறந்து... மனம் விட்டு சிரியுங்கள்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    ----------------------------------------------------------
    இது சிரிப்பதற்கான நேரம்...!!
    ----------------------------------------------------------
    அருண் : எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேத்து ஒரு கேள்விக்கு சரியா பதில் சொல்லிட்டான்...
    குமார் : என்ன கேட்டீங்க...?
    அருண் : ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாதுன்னு சொல்லிட்டான்...
    குமார் : 😝😝
    ----------------------------------------------------------
    ஆசிரியர் : பள்ளிக்கூடத்திற்கு 'கட்" அடிச்சிட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளைக்கு உன் அப்பாவ கூட்டிக்கிட்டு வா...
    மாணவன் : அவர் படம் பாக்கல சார்... கதையை நான் சொல்றேன்.
    ஆசிரியர் : 😳😳
    ----------------------------------------------------------
    ஹா... ஹா... இது எப்படி இருக்கு?
    ----------------------------------------------------------
    ஆண் கொசு : டார்லிங் உனக்காக ஒரு சிங்கத்தையே வேட்டையாடி கொண்டு வருவேன்...
    பெண் கொசு : ஓகே... ஓகே போய் தூங்கு...
    ஆண் கொசு : கண்ணே... உனக்காக ஒரு யானையவே அடிச்சு கொண்டு வந்து கொடுப்பேன்...
    பெண் கொசு : சரி... சரி... மொதல்ல தூங்கு போ...
    ஆண் கொசு : உன்ன நான் விலைமதிப்புள்ள கார்ல உட்கார வெச்சு கூட்டிக்கிட்டு போறேன்...
    பெண் கொசு : உனக்கு என்மேல எவ்ளோ அன்பு-னு புரியுது டியர். காலையில பேசலாம்... போயி தூங்கு...
    ஆண் கொசு : நீ என்ன நம்ப மாட்டியா? நாளைக்கு உனக்கு 100 கிராம்ல தங்க செயின் போடுவேன் பாரு...
    பெண் கொசு : நம்புறேன் டியர்... நீ இப்போ தூங்கு...
    ஆண் கொசு : உலகமே திரும்பி பாக்குற மாதிரி உனக்கு வைரத்துல நகை போடுவேன் பாரு...
    பெண் கொசு : ஆண் கொசுவை ஓங்கி அறைந்து வாயால வடை சுடுறவன கடிச்சிட்டு இங்க வந்து உளறாதன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்...?
    ஆண் கொசு : 😖😖
    ----------------------------------------------------------
    சிறந்த வரிகள்...!!
    ----------------------------------------------------------
    👉 சிறந்த மனிதனுக்கான பண்புகளில் வலியும், வேதனையும் பின்னிப் பிணைந்தவை...

    👉 பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும், தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...
    சிறகுகளை இழந்தாலும் வருந்த மாட்டாய்....

    👉 எனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்லிக்கொள்ளுங்கள்...
    ஆனால்... அடுத்தவனுக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்து விடாதீர்கள்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக