>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 12 ஆகஸ்ட், 2020

    புலியின் திருமணம்... பூனைக்கு இவ்வளவு தைரியமா?... சிரிக்க மட்டுமே... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

    -----------------------------------------------
    சிரிக்கலாம் வாங்க...!!
    -----------------------------------------------
    பாபு : சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா?
    சர்வர் : ஏன் இவ்வளவு அக்கறையா கேக்குறீங்க?
    பாபு : எது ஆர்டர் செஞ்சாலும் பாதி தான் வருது... அதான்...
    சர்வர் : 😳😳
    -----------------------------------------------
    சீனு : உங்க சம்சாரம் வந்தா மட்டும் டபக்னு சீட்டை விட்டு எந்திரிக்கிறீங்களே? ஏன் மேனேஜர் சார்?
    அருண் : ஹி ஹி ஒரு மரியாதைதான், பயம்னு நினைச்சுடாதீங்க.
    சீனு : 😂😂
    -----------------------------------------------
    குமார் : என் மனைவி என் மேலே கோபம்-னா சமைக்கமாட்டா.
    ராஜா : என் மனைவி என் மேலே கோபம்-னாதான் சமைப்பா.
    குமார் : 😜😜
    -----------------------------------------------
    கோபால் : என் மனைவியோடு ஹோட்டலுக்கு சாப்பிட போனது தப்பா போச்சு...
    சேகர் : ஏன்... என்னாச்சு?
    கோபால் : பில்லுக்கு காசு கொடுக்காம என்னை மாவாட்ட சொல்லிட்டு வந்துட்டா...
    சேகர் : 😁😁
    -----------------------------------------------
    இது சிரிக்க மட்டுமே...!!
    -----------------------------------------------

    ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு  ரிசப்ஷன் வெச்சுது...

    எல்லா விலங்குகளும் விருந்து சாப்பிட்டுட்டு, புலி ஜோடியை நாலு அடி தள்ளி நின்னே வாழ்த்திட்டு போச்சு. மாப்ள புலிக்கோ கர்வம் தாங்கல.

    திடீர்னு ஒரு பூனை மட்டும் சரசரன்னு புலிக்கிட்ட போயி கைக்கொடுத்து வாழ்த்து சொல்லிடுச்சு.

    புலிக்கு ஆத்திரம் வந்துடுச்சு. பூனைய பாத்து கர்ஜனையோட, டேய் இத்தனை பேரு என்னை தூரமா நின்னு வாழ்த்திட்டு போறாங்க...

    உனக்கு மட்டும் எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட வந்து வாழ்த்து சொல்லுவ? நான் புலிடா-ன்னு சொல்லியது.

    அந்த பூனையோ கெக்க பிக்கன்னு சிரிச்சுக்கிட்டே அடேய் கிறுக்கு பயலே!

    நானும் கல்யாணத்துக்கு முன்ன 'புலிதான்டா" ன்னு சொல்லிட்டு ஓடிப்போச்சு!

    கதையின் நீதி:

    புலியைக் கூட பூனையாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள் பெண்கள்.😋😋

    -----------------------------------------------
    குறளும்... பொருளும்...!!
    -----------------------------------------------
    ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
    தழுக்கா றிலாத இயல்பு.

    விளக்கம்:

    ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பை தனக்கு உரிய ஒழுக்க நெறியாக கொண்டு போற்ற வேண்டும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக