Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 13 ஜூலை, 2020

பிடிவாதம் கொண்ட சிறுமி

ஒரு ஊரில் கீதா என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவள் நன்றாகப் படிப்பாள். அவளிடம் கொடுக்கும் வேலையை சரியாக செய்து முடிக்கும் திறமைசாலியானவள். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வாள்.

ஆனால் கீதாவின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. கீதா அவள் அம்மா, அப்பாவிடம் எது கேட்டாலும் உடனே வாங்கி தந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள்.

அடுத்த நாள் கீதாவின் பிறந்தநாள். ரொம்ப நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அன்றே வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்தாள்.

கீதாவின் பெற்றோர் தங்கள் சூழ்நிலையைக் கூறி, அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன் என்றனர். அதெல்லாம் முடியாது நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கைகடிகாரம் வேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

கீதாவின் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். பள்ளி முடிந்ததும் கீதா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. உடனே பக்கத்தில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டாள்.

அப்பா உங்க கால் ரொம்ப அடிப்பட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு எடுக்காமல் வேலைக்குப் போகிறீர்கள்? என்று ஒரு சிறுமி பேசுவதை கேட்டாள். நீ தான், எல்லோரும் சுற்றுலா செல்கிறார்கள். நானும் போக வேண்டும் என்று விருப்பப்பட்டாய். அதனால், நான் லீவு எடுக்காமல் வேலைக்குப் சென்றால்தான் உனக்கு சுற்றுலா செல்வதற்கு பணம் தர முடியும் என்றார்.

அப்பா நான் சுற்றுலா போகவில்லை. அடுத்தமுறை வருவதாகக் கூறி விடுகிறேன். நீங்க உங்க காலைப் பார்த்துக்கோங்கப்பா என்றாள். அந்த சிறுமியின் அம்மா, நீங்க ரெஸ்ட் எடுங்க, அவள் சுற்றுலா போகட்டும். ஒரு பெரிய வீட்டுல வேலை இருக்குதாம், நான் வேலைக்குப்போறேன். அந்த பணம்,சுற்றுலா செல்லவும், உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சரியாக இருக்கும் என்றாள்.

ஒரு சிறுமி தன் அப்பாவின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்கிறாள், அவள் அம்மாவும் குடும்பத்திற்காக வேலைக்கு செல்கிறார். இதை பார்த்த கீதா அவளின் தவறினை உண்ர்ந்தால் இனி நாமும் அம்மா, அப்பாவுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைத்தாள்.

கீதா வீட்டிற்கு வந்ததும், பெற்றோர் கீதா என்று அழைக்க, அப்பா கைக்கடிகாரம் இப்பொழுது இல்லை என்றால் என்ன அடுத்த பிறந்த நாளைக்கு வாங்கித்தாருங்கள் என்று கூறினாள். கீதா பேசியதைக்கேட்டு வியப்படைந்தனர் அவளது பெற்றோர். தனது பிடிவாத குணத்தை மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியோடு பிறந்த நாளைக் கொண்டாடினாள் கீதா.

நீதி :

வீட்டின் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!