ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் டிவிகளும் இந்தியாவில் அதிகளவு விற்பனை செயப்படுகிறது. இந்நிலையில் ரெட்மி வரும் செப்டம்பர் 22-ம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசைட்டின்
தகவலின்படி, 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் புதிய ரெட்மி ஸ்மார்ட்
டிவிகள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாம்
எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இந்த டிவியில் இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக புதிய ரெட்மி
ஸ்மார்ட் டிவி மாடல்கள் அதிநவீன அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவந்த தகவலின்படி புதிய ரெட்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை சுற்றி மெலிதான பெஸல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இன்-ஹவுஸ் இமேஜ் ப்ராசஸிங் தொழில்நுட்பம், விவிட் பிக்சர் எஞ்சின் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள். அதேபோல் இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளதுஅந்நிறுவனம்.
ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட பேட்ச்வால் 4 உடன் இயங்கும் இந்த புதிய ரெட்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள். அதேபோல் மீடியாடெக் சிப்செட் வசதிகளுடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவிகள் ஆனது டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் எக்ஸ் ஆடியோ ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு ஆட்டோ லோ லேடென்சி பயன்முறையையும் கொண்டிருக்கும் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள். அதேபோல் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி 32-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள். அதேபோல் விரைவில் வரும் ரெட்மி ஸ்மார்ட் டிவி சீரிஸ் ஆனது ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரீஸுக்குப் பிறகு ரெட்மியில் இருந்து இந்தியாவிற்கு வரும் இரண்டாவது டிவி தொடராக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக