சியோமி நிறுவனம் இன்று நிகழ்த்திய அதன் வெளியீட்டு நிகழ்வில் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலான சியோமி 11T தொடரை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் சியோமி 11T, சியோமி 11T ப்ரோ, சியோமி Mi 11 லைட் மற்றும் சியோமி Mi 11 லைட் 5ஜி என் இ ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் நிறுவனம் சியோமி பேட் 5 சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது.
புதிய சியோமி 11 டி ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67' இன்ச் கொண்ட 1080 பிளஸ் பிக்சல் கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த புதிய சாதனம் ஸ்னாப் டிராகன் 888 சிப்செட் மூலம் இயங்குகிறது. முன்னர் அறிவிக்கப்பட்டது போல் இது 120W ஹைபார் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டம் கொண்ட அதிவேக சார்ஜ்ர் அம்சத்துடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரியை ஆதரிக்கிறது. மேலும் தொகுக்கப்பட்ட 120 டபிள்யூ சார்ஜர் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதத்தை வெறும் 17 நிமிடங்களில் நிரப்பக்கூடியது என்று சியோமி கூறியுள்ளது.
இதற்கிடையில், 10 நிமிட சார்ஜிங் உங்களுக்கு வெறும் 72 சதவீதமாக இருக்கும். இது கடந்த ஆண்டு சீனாவில் வெளியிடப்பட்ட 120W Mi 10 அல்ட்ரா சியோமியை விட வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 11T ப்ரோ இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான Mi 11 ஃபிளாக்ஷிப்பிற்கு முற்றிலும் மாறுபட்ட போன் ஆகும். இது ஒரு பிளாஸ்டிக் பின்புறத்துடன் வேறுபட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த சாதனம் 108 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. சியோமி 11T வரம்பில் இரண்டு கீழ்நிலை தொலைப்பேசிகளையும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், அதில் இரண்டிலும் 120W வேகமான சார்ஜிங் அமைப்பு இல்லை. மற்றொரு மாடலான சியோமி 11T ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 1200 அல்ட்ரா சிப்செட் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெறும் 37 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்கிறது. அதே நேரத்தில் 11 லைட் 5G NE ஸ்னாப்டிராகன் 778 மற்றும் 4,250mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
சியோமி 11 டி ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை பற்றி பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்ட மாடலுக்கு € 649 என்ற விலை ஆரம்பமாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இது ரூ. 56335 ஆகும். இதன் 12 ஜிபி/256 ஜிபிக்கு € 749 வரை விலை செல்கிறது. அதேபோல், புதிய சியோமி 11T ஸ்மார்ட்போனின் 8ஜிபி/128ஜிபி மாடலுக்கு € 499 என்ற விலை வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின் படி சுமார் ரூ. 43314 ஆகும். இத்துடன் இறுதியாக சியோமி Mi 11 லைட் 5G NE ஸ்மார்ட்போனின் 6ஜிபி/128ஜிபி மாடல் வெறும் € 369 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின் படி வெறும் ரூ. 32030 இல் தொடங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக