>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 2 ஜூலை, 2019

    கிட்டிப்புள்ளு

     Image result for கிட்டிப்புள்ளு

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    பழமையான விளையாட்டுகளில் ஒன்று கிட்டிப்புள்ளு ஆகும்.

    கிரிக்கெட்டிற்கு ஆதி விளையாட்டு கிட்டிப்புள் என்று அழைக்கப்படும். பாதி விறகு போன்ற சவுக்குக் கட்டை ஒரு முனையில் பாதியாக சீவப்பட்டு கிரிக்கெட்டில் இருக்கும் பேட்டுக்கு சமானமாய் தண்டு இருக்கும். புள் என்று அழைக்கப்படும் கில்லி, உள்ளங்கை சைஸில் இரண்டு பக்கமும் கூராகச் சீவப்பட்டு இருக்கும்.

    பொதுவாக இந்த விளையாட்டை சிறுவர்கள் அதிகமாக விளையாடுவார்கள். இந்த விளையாட்டை கிட்டிதக்கா, கில்லி-தண்டா, கில்லி-தண்டு, குச்சிக்கம்பு, சில்லாங்குச்சி, திப்லி, புள்ளுக்கிட்டி என்று ஒவ்வொரு ஊரிலும் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

    எத்தனை பேர் விளையாடலாம்?

    பல பேர்.

    விளையாட தேவையானது :

    கிட்டிப்புள்

    கிட்டிக்கோல்

    எப்படி விளையாடுவது?

    ஒரு சின்னஞ்சிறு நீள் குழியில் இந்தப் புள் குறுக்கு வாட்டில் வைக்கப்பட்டு கீந்தப்படும். கெந்தி விடுதல், கெந்துதல் என்பதுதான் கீந்துவது என்று பேச்சு வழக்காக இருந்தது.

    கீந்தப்படும் புள்ளை பிடிக்க சற்று தூரத்தில் எதிர் அணியினர் இருப்பார்கள். இந்த புள்ளை எதிர் அணியினர் கையிலோ அல்லது கழற்றப்பட்ட அவரவர் சட்டையினாலோ பிடித்துவிட்டால் கீந்திய நபர் அவுட் ஆவர்.

    அவுட் ஆகிவிட்டால் அடுத்து நபர் வந்து அந்த புள்ளை கீந்துவார்கள். இப்படி ஒவ்வொருவராக விளையாடுவார்கள்.

    கேட்ச் பிடிக்கப்படாமல் கீழே விழும் புள்ளை எதிர் டீம் ஆட்கள் எடுக்க வேண்டும்.

    கீந்தியவர் அந்த கிட்டிப்புள்ளை நீள் குழியிலிருந்து பின்னோக்கி இரண்டு தாண்டில் நீளத்திற்கு அந்த கிட்டிப்புள்ளை வைக்க வேண்டும்.

    பிறகு, எதிர் டீம் ஆட்கள் அந்த கிட்டிபுள்ளை எடுத்து தாண்டிலை நோக்கி வீச வேண்டும். அந்த தாண்டில் மீது வீசப்படும் கிட்டிபுள் தாண்டில் மீது பட்டால் கீந்தியவர் அவுட். அப்படி இல்லை என்றால் அந்தப் புள் எங்கு விழுந்திருக்கிறதோ அங்கு சென்று கிட்டியால் புள்ளை ஒரு முனையில் தட்டி மேலெழுப்பி அடிக்க வேண்டும். இது மாதிரி மூன்று முறை செய்யலாம்.

    இப்படி அடித்த புள் எங்கு இருக்கிறதோ அங்கிருந்து கிட்டியால் அளந்து கொண்டே வர வேண்டும். அதுதான் அவரின் ஸ்கோர் ஆகும்.

    கிட்டியால் புள்ளை ஓரச் சீவலில் அடித்து மேலெழுப்பும்போது எதிர் டீம் ஆட்கள் புள்ளைக் கேட்ச் பிடித்துவிட்டாலும் அடிப்பவர் அவுட். அதேசமயம் புள்ளைக் கிட்டியால் அடித்து மேலே எழுப்பி அதை இரண்டு முறை, மூன்று முறை என்று எத்தனை முறை வேண்டுமானாலும் தட்டி அப்புறம் அடிக்கலாம். இதற்கு கில்லி என்று பெயர்.

    இந்த மாதிரி கில்லி அடிக்கும் முயற்சிகளில் இருக்கும்போது எதிர் டீம் கேப்டன் ஸ்கோர் என்ன என்று கேட்பார். யாராவது அவசரப்பட்டு தப்பாகச் சொல்லி விட்டால், அத்தோடு அந்த டீமின் ஆட்டமே காலியாகும்.

    எனவே, ஒவ்வொரு டீமிலும் ஸ்கோர் சொல்ல என்று தனியாக ஆட்களை வைத்து விடுவார்கள்.

    அந்த அணியின் ஸ்கோரை எதிர் அணியினர் தாண்ட வேண்டும். அப்படி தாண்டிவிட்டால் எதிர் அணியினர் வெற்றியாகும்.

    பயன்கள் :

    ஞாபகத்திறன் மேம்படும்.

    கூட்டல், பெருக்கலை கற்றுக்கொடுக்கும்.


    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...




    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக