இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அமேசான் என்னும் அற்புதம்...!
வருடமெல்லாம் கொட்டும் மழை...!!
சூரிய வெளிச்சமே பார்க்காத அமேசான் தரை...!!!
கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்களும், செடிகளும் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு...!!!!
இதுவரை கண்டிராத எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்!!!!
இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்...!!!!
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த அமேசான் காட்டை உருவாக்கிய பெருமை அமேசான் நதிக்கே போய் சேரும்...!!!!!
வாருங்கள்... அமேசான் காட்டிற்கு போகலாம்...
அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும்.
இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது.
அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும்.
அமேசான் காடுகளின் ஜீவாதாரமாய் விளங்கும் அமேசான் நதி உலகின் மிகப்பெரிய நதியாகும்.
இங்கு இருக்கும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட தாவரங்களை இன்னும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை என்பது அமேசானின் பிரம்மாண்டத்தை உலகுக்கு உணர்த்துகிறது.
அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன்பாட்டிற்கு வருகிறது. ஆனால், அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர்.
உலகின் மிகப்பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன. இதன் மூக்குப்பகுதியை மட்டும் நீர் மட்டத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்குமாம்.
இன்றும் அமேசான் காடுகளிலும், நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன.
அமேசான் மழைக்காடுகளுக்கு மத்தியில் ஆவி பறக்க ஒரு கொதிக்கும் ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில் விழுபவர்கள் அனைவரும் தீயில் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
மனித இனம் காணாத பல அதிசயங்கள் இங்கு ஒளிந்திருக்கின்றன.
அமேசான் காடுகளுக்குள் சென்றுவிட்டு எளிதில் மீண்டு வர முடியாது. இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.
ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த அமேசான் காட்டிற்கு சென்று வருவதை கற்பனை செய்தாலே ஜில்லிட்டுப் போகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக