இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேவையான பொருள்கள்:
- மீன் அரை கிலோ
- மிளகு 10
- மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் 100 கிராம்
- தனியா 1 மேசைக் கரண்டி
- எண்ணெய் தேவையான அளவு
- பச்சை மிளகாய் 6
- கடுகு 2 தேக்கரண்டி
- சீரகம் 1 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
- காஷ்மீர் மிளகாய் 10
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- மீனை முதலில் நன்றாகக் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- சுக்கு, தனியா, இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள் தூள், சீரகம், மிளகு, மிளகாய் ஆகிய இவை அனைத்தையும் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- இப்போது மேற்கண்டவற்றுடன் போதுமான அளவு உப்பு சேர்த்து கலக்கி மசாலா பதத்தில் கொண்டு வரவும்.
- இவ்வாறு தயாரான அந்த மசாலாவை மீன் மீது நன்கு தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
- இப்போது ஊற வைத்த அந்த மீனை எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும்.
- இப்போது இன்னொரு வாணலியில் வெங்காயத்தை வதக்கும் அளவிற்கு போதுமான எண்ணெய்யை ஊற்றி நன்கு காய வைக்கவும்.
- எண்ணெய் நன்கு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு பச்சை வாசனை வராமல் பொன்னிறத்தில் வறுக்கவும்.
- இப்போது அவ்வாறு வறுத்த அந்த வெங்காயத்தை மீனின் மேல் தூவவும்.
- இதோ இப்போது சுவையான ஆனியன் மீன் ரோஸ்ட் தயார்.
- மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால், எந்த வியாதிகளும் நம்மை அண்டாது என்பது மருத்துவர்களின் விளக்கம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக