இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்க வைத்து
அதிகமாக அமர்ந்திருக்கிறோம்.
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது,
பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில்,
சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிக நேரமாக
காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
இப்படிக் காலைத் தொங்க வைத்து அமர்வதால்
நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது.
இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்க
வைத்து அமரும் பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே
அதிகமாக செல்கிறது.
நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்
பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு
நடக்கும் பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்
.
மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம்,
கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப் பகுதியில் தான் இருக்கிறது.
எனவே ஒருவர் காலை தொங்கப் போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும்,
ஆரோக்கியமும் அதிகமாகக் கிடைக்கிறது.
எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து
காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம்
செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக
நடைபெறுகிறது.
சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து
நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச்
செல்கிறது.
இந்திய வகை கழிவறை செல்லும் போது மட்டும்
தான் காலை மடக்கி அமர்கிறோம்.
யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது
குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்.
அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள்
கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு
முடியாமல் தவிக்கிறார்கள்.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களால் சம்மணங்கால் போட்டுக் கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை
எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே முடிந்த வரை காலை தொங்க வைத்து அமர்வதை
தவிருங்கள்.
எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்.
கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும் பொழுது சம்மணம்
இட்டே அமருங்கள்.
சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு
விரிப்பை விரித்து அதன் மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக
ஜீரணிக்கும்.
சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று
இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
சாப்பிடும் முறைகளில் சில!
1. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை
மாற்றி குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.
2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக
மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்.
3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம்
பார்த்து கொண்டே சாப்பிடக் கூடாது.
4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல்
தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. அது மட்டும் அல்ல,
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்.
5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.
6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட
வேண்டாம்.
7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும்
சாப்பிட வேண்டாம்.
8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிடப்
பழகவும்.
9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை
உணவுகளை சேர்க்க வேண்டாம்.
10. சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு
பழங்கள் சாப்பிடுங்கள் பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.
11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு
பின்பு சாப்பிடவும் இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்.
12. சாப்பிட வேண்டிய நேரம்
காலை - 7 to 9 மணிக்குள்.
மதியம் - 1 to 3 மணிக்குள்.
இரவு - 7 to 9 மணிக்குள்.
13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்துத்
தான் தூங்க வேண்டும்.
14. சாப்பிடும் முன்பும் பின்பும் இறைவனுக்கு
நன்றி சொல்ல மறக்காதீர்கள்.
அமருங்கள் சம்மணமிட்டு சாப்பிடுங்கள் முறையாகவாழுங்கள் ஆரோக்கியமாக!
நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென
தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து
முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும், மீண்டும்
அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.
விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிவரை
நுரையீரலின் நேரம் இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண
சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
வியாதியின் தொல்லைகள்
குறையும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும்
சிரமப்படுவார்கள்.
விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணி வரை
பெருங்குடலின் நேரம். காலைக் கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்.
மலச்சிக்கல்
உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால்
நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும்
கூட இதுவே.
காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின்
நேரம். இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன்
போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவது தான் நன்கு செரிமானமாகி
உடலில் ஒட்டும்.
காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை மண்ணீரலின்
நேரம். காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற
நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது மண்ணீரலின் செரிமான
சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்த நேரத்தில் அதிகமாகப்
பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதனால் இதயம் பாதிக்கப்படும்.
இதய நோயாளிகள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.
பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு
குடலின் நேரம். இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி
வரை சிறு நீர்ப்பையின் நேரம் நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம் இது.
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின்
நேரம் பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய,
வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு 700 மணி முதல் 900 மணி வரை, பெரிகார்டியத்தின்
நேரம். பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இதயத்தின்
Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள்
கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை
இயங்கும் நேரம் இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு
ஏற்படும்.
இரவு 1.௦௦ மணி முதல் விடியற்காலை 3.00
மணி வரை கல்லீரலின் நேரம். இந்த நேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ
கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே
வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்.
என்ன அன்பர்களே! இப்போது புரிகிறதா? வியாதிகள்
ஏன் தொடர் கதையாக வருகிறது என்று. மேற்கண்ட முறைப்படி நீங்கள் வாழத் தொடங்கினால் வியாதிகளும்
இல்லை, மருந்துகளும் இல்லை. அதனால், நேயர்கள் அனைவரும் மேற்கண்ட ஆலோசனைகளை பின் பற்றும்
படி கேட்டுக் கொள்கிறோம்.
நோயற்ற வாழ்வு தான் குறைவற்ற செல்வம்.
அதன் படி நாம் அனைவருமே நோயற்ற வாழ்வை வாழ்வோம். அடுத்தவற்கும் இதனை சொல்வோம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக