Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 29 ஜனவரி, 2019

புளிய மரம்

Tamarind


இதற்கு அமிலம், சிந்தூரம், சிந்தகம், சஞ்சீவகரணி போன்ற பெயர்களும் உண்டு. குடும்பம் சிசால்பினியேசி). இம்மரத்தின் தாவரவியல் பெயர் டேமரிண்டஸ் இண்டிகா என்பதாகும். இதன் தாயகம் இந்தியா என்று முன்பு கருதப்பட்டது. ஆனால் இம்மரத்தின் தாயகம் வெப்ப மண்டல ஆப்பிரிக்காவாக இருக்கும் எனத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இம்மரம் காடுகளில் தானாக வளரும். சாலை ஓரங்களில் இம்மரத்தை வளர்ப்பதும் உண்டு. ஆனால் தென்னை, மா, பலா, முந்திரி போன்ற மரங்களைப் போல் இம்மரத்தைப் பெரும் எண்ணிக்கையில் வளர்ப்பதில்லை. புளியமரம் பெரும்பாலும் நட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னரே காய்த்துப் பயன்தரத் தொடங்குகிறது. இது 100 ஆண்டுகளுக்கு மேலும் வளரும்.
புளியமரம் 25 மீட்டர் உயரம் வளரும். 8-10 மீட்டர் சுற்றளவைக் கொண்டிருக்கும். இம்மரம் உறுதியானது. இதன் பக்கக் கிளைகள் பரவிக் காணப்படும். இவை எளிதில் முறிவதில்லை.
புளியமரத்தின் இலை, பூ, பிஞ்சு, பழம், ஓடு, விதை, பருப்பு, மரம் முதலியவை நன்கு பயனாகின்றன. புளியமரம் உறுதியானது. மரவேலை செய்யக் கடினமானது. சக்கரம், கொட்டாப்புளி, உலக்கை, செக்கு, உரல், கரும்பலகை முதலியவற்றைச் செய்ய இது பயன்படுகிறது. எரிதிறன் 4909 கிலோ கலோரி ஆகும்.
புளியமரத்தைப் பிளந்து விறகாக எரிக்கலாம். துப்பாக்கிக்கு உரிய வெடிமருந்துத் தயாரிப்பில் சிகிகரி பயனாகிறது. மரப்பட்டையில் 7% மடனின் உள்ளது. பட்டையிலிருந்து கோந்து வடியும், புளியமரத்தைக் காற்றுத் தடைக்காக வளர்க்கலாம். இதனை வளர்த்தால் மண் அரிப்பு உண்டாகாது.
  • பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும். புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் தீரும். புளியம் பிஞ்சுகளைச் சிறுசிறு துண்டுகளாக்கி உப்பில் ஊறவைத்து உண்பதுண்டு.
  • புளியம் பழங்களின் சுவை மரத்தின் வகைக்கு ஏற்பவும், விளையும் நிலப்பகுதிக்கு ஏற்பவும் இனிப்பாகவோ, புளிப்பாகவோ இருக்கும். புளி விதைப் பொடியைத் துணித்தொழிற்சாலையில் பயன்படுத்துவர். ஜாம், ஜெல்லி, மார்மலேட் முதலியவற்றிற்குரிய ஜெல்லோஸ் தயாரிக்க இது உதவுகிறது. விதை புரதம் நிறைந்தது. இப்புரதத்தில் புரோலமின், குளுட்டெலின், ஆல்புமின் ஆகியவை உள்ளன.
  • புளிய விதை எண்ணெயைக் கொண்டு வர்ணங்கள் வார்னிஷ் இவற்றைத் தயாரிக்கலாம். விளக்கு எரிக்கலாம். புளியம் பருப்பிலிருந்து தயாரித்த பசையைக் கொண்டு பலகைகள் ஒட்டப்படுகின்றன. சிமெண்டைப் போல இது கெட்டியாக ஒட்டும். கசப்பான விதைத்தோல் வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பைப் போக்கும். விதையிலிருந்து அரைத்த பசையைக் கொப்புளங்களுக்குத் தடவலாம். கொட்டையினால் கழிச்சல், புண், நீர்க்கடுப்பு, வெள்ளை ஆகியவை போகும்.
  • புளியைக் கொண்டு பித்தளை, செம்பு பாத்திரங்களையும், இசைக் கருவிகளையும் துலக்கினால் அழுக்கு நீங்கி பளபளப்பான தோற்றம் கிட்டும். வெள்ளி நகை, பாத்திரங்கள் ஆகியவற்றிற்கும் வணிகர்கள் புளியைப் பயன்படுத்துவர்.
புளிய மரம் வளர்ப்பு
உரங்கள் தேவை. விதையை நட்டு உருவாகும் புளிய மரங்கள் 6-8 வருடங்களில் பலன் தரும். செடியாக நடப்பட்ட மரங்கள் காய்க்க 3-4 வருடங்கள் போதும். மெதுவாக வளரும் புளியமரம் அதிக ஆயுள் உள்ளது.
நன்கு வளர்ந்த புளியமரம், ஒரு வருடத்திற்கு 160 கிலோ வரை புளியை சராசரியாக தரும்.

அமைப்பு
வெவ்வேறு நீளங்களில் காய்கள் காய்ந்து பழுக்கும்.
தடித்த ஓடுக்குள் புளி பாதுகாக்கப்படுகிறது. அதன் உள்ளே கடினமான விதைகளும் இருக்கும்.

புளிய இலையின் பயன்கள்
  • இது வயிற்றை சுத்தபடுத்தி கிருமிநாசிகளை அளிக்கிறது.
  • புளி இலை ஒரு ஆயுர்வேத மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.
  • புளி இலை இரைப்பை பிரச்சனை, செரிமானப் பிரச்சனை போன்றவற்றை தீர்த்து இதயத்துடிப்பை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.
  • புளி இலைகளை மூலிகை தேநீர் செய்து குடித்தால் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தலாம்.
  • புளி இலைகள் காபி தண்ணீரில் பயன்படுத்தினால் மஞ்சள் காமாலை மற்றும் புண்களை குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.
  • புளி இலை சேர்த்த காபி குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்களை அளிக்கிறது.
புளியின் பயன்கள்
  • புளியில் கால்சியம், வைட்டமின் ‘பி’ பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, உணவில் மணமூட்டவும், சுவையூட்டவும் புளி பயன்படுகிறது.
  • புளியங்க்கொட்டையில் 63% மாவுப்பொருட்களும், 14-18% ஆல்புமினும், 4.5-6.5% பாதி உலரும் எண்ணெய்யும் இருக்கின்றன.
புளிய மரத்தின் மருத்துவ குணங்கள்
  • பிலிப்பைன்ஸில் இலைகள் டீ யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுத்தப்படுகிறது.
  • புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும்.
  • புளியுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட, தேள் விஷம் இறங்கும்.
  • புளியங்கொழுந்துடன் பருப்பு சேர்த்து செய்த கூட்டை சாப்பிட்டு வர உடல் நலம் பெறும்.
  • புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும்.
  • புளியமரம் கடினமான பலமான மரம். புழு, பூச்சிகளால் எளிதில் பாதிக்கப்படாதது. எனவே, ஃபர்னிச்சர் தயாரிப்பில் நன்கு உபயோகப்படுகிறது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்எங்களின்
 கருத்துகளில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக