இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
பாதத் தோல் வறண்டு, புண்ணாகி,
வெடிப்பு ஏற்பட்டு வலி வந்த பின்னால்தான் நம் உடலில் அப்படி ஒரு பகுதி இருப்பதையே
உணர்கிறோம். ஆனால், `அது நல்லதல்ல. முகத்துக்குக் காட்டும் அக்கறையில்
சரிபாதியையாவது, பாதத்துக்கும் காட்ட வேண்டும்.
முகத்தைப்
பொலிவாக வைத்துக்கொள்ள எல்லோரும் பெரிய அளவில் மெனக்கெடுகிறோம். லேசாக வியர்த்தாலே
கைக்குட்டையைக் கொண்டு துடைத்துக்கொள்வது, வெளியே சென்று வந்தால் முகம் கழுவுவது,
முகத்தில் பரு, கருவளையம் ஏற்பட்டால் அலறி அடித்துக்கொண்டு மருத்துவரிடம் ஓடுவது,
முகத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ள க்ரீம்களை வாங்கிப் பூசுவது என என்னென்னவோ
செய்கிறோம். அதேநேரம், நம் உடலை முழுமையாகத் தாங்கும் பாதத்தின் மீது எந்தளவுக்கு
அக்கறை காட்டுகிறோம்..?
பாதத் தோல் வறண்டு, புண்ணாகி, வெடிப்பு ஏற்பட்டு வலி வந்த
பின்னால்தான் நம் உடலில் அப்படி ஒரு பகுதி இருப்பதையே உணர்கிறோம். ஆனால், `அது
நல்லதல்ல. முகத்துக்குக் காட்டும் அக்கறையில் சரிபாதியையாவது, பாதத்துக்கும் காட்ட
வேண்டும்’ என்கிறார் சரும மருத்துவர் சிவக்குமார்.
பாதவெடிப்பு எனப்படும் பித்தவெடிப்பு ஏன்
ஏற்படுகிறது, வராமல் தடுப்பது எப்படி என்பதையும் விரிவாக விளக்குகிறார் அவர்.
”தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான
முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில்
வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால்
பாதத்தில் வெடிப்பு உண்டாகும். நம் காலில் உள்ள தோல் மிகவும் தடிமனாக இருக்கும்.
அதற்குக் கீழே ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த
அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக்
கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி சுத்தம்செய்து
மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்தினால் வெடிப்பு ஏற்படாது. பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ்
ஆயில், கற்றாழை க்ரீம் போன்றவற்றை மாய்ஸ்ச்சரைசராகப் பயன்படுத்தலாம். எதுவுமே
இல்லாதபட்சத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாம். பாதவெடிப்புகள் லேசாக இருந்தால் இந்த
சிகிச்சைகள் போதுமானது.
அதேநேரம், ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி,
கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க
வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக
மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பாதவெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று
பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோல் முற்றிலுமாக கெட்டுவிடும்.
வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், மிகவும் லேசான தோல்களையுடைய,
திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும். அதேபோல்,
மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்துபவர்கள் இரவில் க்ரீமைத் தடவி, அப்படியே விட்டுவிடாமல்,
மேலே சாக்ஸ் அணிந்துகொள்வது நல்லது. அதேபோல், குளிக்கும்போது பாதத்துக்குரிய
ஸ்க்ரப்பர்களைப் பயன்படுத்தி கால்களை லேசாக ‘ஸ்க்ரப்’ செய்யலாம். அப்படிச்
செய்தால் பாதம் மிகவும் மென்மையானதாக மாறிவிடும்.
உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர,
உடல் பருமனாக இருப்பவர்கள், எடை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம்
கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். பாதவெடிப்பால் உண்டாகும் வலியை உணர
முடியாததால் பாதிப்புகள் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. முகத்தைப் பார்த்துக்கொள்ளும்
அளவுக்குப் பாதத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும். குளிக்கும்போது கண்ணாடி
வைத்துப் பாதங்களைக் கவனிக்க வேண்டும்.
பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை
எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.
கால்களில் நகங்களை வெட்டும்போது
முழுமையாக வெட்டிவிடாமல் லேசாக நகம் இருக்குமாறு வெட்ட வேண்டும். முழுமையாக
வெட்டினால், சதைப் பகுதிக்குள் நகம் வளர்ந்து வலி உண்டாகும். அதேபோல், நகங்களுக்கு
இடையே காணப்படும் இடைவெளியை எப்போதும் உலர்ந்த தன்மையோடு இருக்கும்படி
பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரத்தன்மையோடு இருந்தால் தொற்றுகள் உண்டாக
வாய்ப்பிருக்கிறது. பாதவெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்லாது அனைவரும் மிக மெல்லிய
தோல்களையுடைய செருப்புகளையே அணிய வேண்டும். மிகவும் இறுக்கமான ‘ஷூ’ அணிவதைத்
தவிர்த்துவிடுவது நல்லது” என்கிறார் சரும மருத்துவர் சிவக்குமார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக