>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 22 மே, 2019

    முடி கொட்டும் பிரச்சனை அதிகாமாக இருக்கிறதா? இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்!!


     Image result for முடி கொட்டும் பிரச்சனை அதிகாமாக இருக்கிறதா


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

    எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
    இப்பொழுதே இணைந்துகொள்

    இன்று அனைவரும் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்சனை தலை முடி உதிர்தல், வழுக்கை மற்றும் இளநரை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் போதிய
    ஊட்டச்சத்து இல்லாமை. உடலுக்கு மட்டும் அல்ல கூந்தல் பராமரிப்பிற்கும் அதிக மெனக்கடல் தேவைப்படுகிறது. இன்று நாம் காண இருப்பது பட்டு போன்ற கருமையான பள பளக் கூந்தலுக்கு தேவையான கூந்தல் தைலம்.
    கூந்தல் தைலம் செய்யத் தேவையான பொருட்கள்:
    தேங்காய் எண்ணெய் 2 லிட்டர்,
    செம்பருத்தி பூ மற்றும் இலை 1 கிலோ,
    நெல்லி முள்ளி 250 கிராம்,
    வாங்கி பவுடர் செய்யவும்,
    மருதாணி 10 கைப்பிடி அளவு,
    துளசி 10 கைப்பிடி,
    வேப்பிலை 10 கைப்பிடி,
    ஆலோ வீரா 3 பெரிய தண்டின் சதைகள்,
    எலுமிச்சை 8 அரைத்து விழுதாக்கவும்,
    கார்போக அரிசி 250 கிராம் பவுடர் செய்யவும்,
    கரிசலாங்கண்ணி 1 கட்டு,
    நாட்டு பொண்ணாங்கன்னி 2 கட்டு,
    ஆவாரம் பூ 1/2 கிலோ,
    கருவேப்பிலை 12 கைப்பிடி,
    கருப்பு எள் 250 கிராம்,
    மல்லிப்பூ 3 கப்,
    பன்னீர் ரோஜா 30,
    வெட்டி வேர் 1 கைப்பிடி,
    செய்முறை:
    1. மேல் கொடுக்கப்பட்ட அனைத்தையும் வெட்டிவேர் தவிர்த்து கிரைண்டரில் தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும்.
    2. வெட்டி வேரை சிறியதாக கட் செய்யவும்.
    3. அடிகனமான இரும்பு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் எண்ணெய்யை மிதமான சூட்டில் வைக்கவும். எண்ணெைய் சூடானதும் அரைத்து வைத்த விழுதையும், வெட்டி வேரையும் சேர்த்து கைவிடாமல் கலக்கவும்.
    4. இந்த கலவை கரும்சிவப்பு நிறத்தில் வரும். இதற்கு ஒரு மணி நேரம் தேவைப்படும்.
    5. இப்போது அடுப்பை அணைத்து அதே பாத்திரத்தில் ஆற விடவும்.
    6. இந்த கலவை அப்படியே மூன்று நாட்கள் ஊற வேண்டும்.
    7. பின்னர் இதை கையினால் நன்கு பிழிந்து சாறு எடுக்கவும்.
    8. இதில் 750 கிராம் எண்ணெைய் கிடைக்கும்.
    9. பின்னர் இந்த எண்ணெய் கலவையுடன் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் கலந்து வைக்கவும். இந்த எண்ணெய்யை எப்படி உபயோகிப்பது தினமும் தலையில் தேய்க்க ஒரு லிட்டர் எண்ணை கலவையுடன் மேலும் இரண்டு லிட்டர் எண்ணெய்யை கலந்து வைத்து தினமும் தலையில் தேய்க்கலாம்.
    வாரத்தில் மூன்று நாள் மசாஜ் செய்ய ஒரு லிட்டர் எண்ணெய் கலவையுடன் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து வைத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலை மசாஜ் செய்து தலைக் குளிக்கலாம். வாரம் ஒருநாள் தலைக்கு எண்ணெய் குளியல் செய்ய ஒரு லிட்டர் எண்ணெய் கலவையுடன் 500 கிராம் தேங்காய் எண்ணெய் மற்றும் 500 கிராம் நல்லெண்ணெய் கலந்து வைத்துக் கொண்டு வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்யலாம்.
    இந்த எண்ணெய்யை தொடர்ந்து உபயோகித்து வர முடி உதிர்தல் குறைந்து, முடி வளர்ச்சி பெறும், இள நரை குறையும். சிறு வயதில் இருந்து இந்த எண்ணெய் உபயோகிப்பவவர்களுக்கு எந்த சரும மற்றும் தலை முடி பிரச்சனைகள் வராது. ஐம்பது வயதனாலும் கரு கரு கூந்தலுடன் வலம் வரலாம்.
     என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக