Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 மே, 2019

சேவூர் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்

சேவூர் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர் T_500_92 



மூலவர் : வாலீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார் : அறம்வளர்த்தநாயகி
தல விருட்சம் : -
தீர்த்தம் : தெப்பம்
ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : சேவூர்
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.

தல சிறப்பு:

சுந்தரரால் பதிகம் பெற்ற வைப்புத்தலம் இது. அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் பாலதண்டாயுதர், கையில் தண்டத்துடன் காட்சி தருகிறார்.

திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், சேவூர்- 641 655. கோயம்புத்தூர் மாவட்டம்.

போன்:

+91- 99428 41439.

பொது தகவல்:


பிரகாரத்தில் பஞ்சலிங்கம், சகஸ்ரலிங்கம், சூரியன், சந்திரன், நால்வர் ஆகியோர் உள்ளனர். மேற்கு நோக்கி சனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நவக்கிரக மண்டபமும் உள்ளது.

கோயிலுக்கு எதிரே வெளியில் தீப ஸ்தம்பம் உள்ளது. இதில் வாலி, சிவபூஜை செய்த சிற்பம் இருக்கிறது. அருகிலுள்ள அரச மரத்தின் அடியில் விநாயகர் இருக்கிறார். இவருக்கு அருகில் பாண வடிவில் சிவலிங்கம் இருக்கிறது. இருபுறமும் ராகு, கேது உள்ளது.



பிரார்த்தனை

திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு சிவன், அம்பாள், முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால்தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.


நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

சேவலுடன் முருகன்: சுவாமிக்கு இடப்புறத்தில் அம்பிகை அறம் வளர்த்த நாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவ்விரு சன்னதிகளுக்கு நடுவில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார். இவர் இடது கையில் சேவல் வைத்திருக்கிறார். பொதுவாக முருகன் தலங்களில் சுவாமி, கையில் சேவல் கொடிதான் வைத்திருப்பார். இங்கு சேவலை வைத்திருப்பது வித்தியாசமான அமைப்பு. இவரது பீடத்தில் சிம்மம் இருக்கிறது. வள்ளி, தெய்வானை உடன் இருக்கின்றனர். இங்கு நடராஜர் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இந்த மூர்த்தி மிகவும் விசேஷமானவர். விசேஷமான 5 தலத்து நடராஜர்களின் உருவத்தை ஒன்று சேர்த்து இந்த சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு ஆருத்ராதரிசன விழா சிறப்பாக நடக்கிறது.

“இத்தலம் நடு சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. தல விநாயகரின் திருநாமம். அனுக்கை விநாயகர். 5 நிலையுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது.


தல வரலாறு:

சுக்ரீவனின் அண்ணன் வாலி, ஒரு தோஷ நிவர்த்திக்காக சில தலங்களில் சிவனை வழிபட்டார். அவ்வாறு அவரால் வழிபடப்பட்ட தலம் இது. வாலி வழிபட்டதால் இங்கு சிவன், "வாலீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: சுந்தரரால் பதிகம் பெற்ற வைப்புத்தலம் இது. அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் பாலதண்டாயுதர், கையில் தண்டத்துடன் காட்சி தருகிறார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன  மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்  மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக