புறா தூது மூலம் காதல், கடிதம் மூலம் காதல்,
லேண்ட் லைன் போன் மூலம் காதல், மொபைல் போன் மூலம் காதல் இதையெல்லாம் கடந்து வந்து
தற்போது சமூகவலைதளங்களில் காதல். சமூகவலைதள காதலில் முகம் தெரியாத நபர் என்று
கூறிவிட முடியாது.
பேஸ்புக்
வாட்ஸ்ஆப் இன்ஸ்டா டுவிட்டர்
தற்போது பலரும் சமூகவலைதளங்களில்தான்
தங்களது பெரும்பாலான நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 1 ஜிபி
அளவிலாவது பேஸ்புக் வாட்ஸ்ஆப் இன்ஸ்டா டுவிட்டர் போன்றவற்றில் காலி செய்வது
வழக்கம்.
பொழுதுபோக்கிற்காக
பேஸ்புக்
இந்த நிலையில் சென்னை, கொடுங்கையூர்
பகுதியைச் சேர்ந்த ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவருக்கு 20
வயதில் ஒரு இளம் பெண் உள்ளார். பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருக்கும்
அந்த பெண் தனது பொழுதுபோக்கிற்காக பேஸ்புக் பயன்படுத்தி வந்துள்ளார்.
22
வயதான இளைஞர்
அந்த பெண் பொழுதுபோகாமல் முகநூலில்
பொழுதை கழித்து வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் கொடுங்கையூரைச் சேர்ந்த 22
வயதான நூரல் ஆசிம் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார்.
பேசிப்பேசி
காதல் வலையில் வீழ்த்திய இளைஞர்
வழக்கம்போல் ஆரம்பத்தில் சாதாரணமாக
அந்த பெண்ணிடம் பேசி வந்த நூரல் ஆசிம், முகநூல் சாட் மூலம் பேசிப்பேசி தனது காதல்
வலையில் அந்த பெண்ணை வீழ்த்தி உள்ளார். அந்த 22 வயது இளம் பெண்ணும் நூரல் ஆசிமின்
சொக்கவைக்கும் பேச்சில் மயங்கி அவரை காதலிக்கத் தொடங்கியுள்ளார்.
இரவு
பகலாக முகநூலில் சேட்
இதையடுத்து இருவரும் பிறகு இரவு பகலாக
முகநூலில் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இளம் பெண் தன்னை முழுமையாக காதலிக்கத்
தொடங்கிவிட்டார் என்பதை உறுதி செய்த ஆசிம் தனது வேலையைக் காட்ட தொடங்கினான்.
பாலியல்
வலையில் சிக்க வைக்க முயற்சி
முதலில் பேஸ்புக் சாட்டில் ஆபாசமாக
பேசத் தொடங்கி தனது பாலியல் வலையில் அந்த இளம்பெண்ணை சிக்க வைக்க
முயற்சித்துள்ளான். ஆசிம்-ன் இதுபோன்ற சாட்களை பார்த்த அந்த பெண் ஒருநிமிடம்
அதிர்ந்து போகியுள்ளார். இதையடுத்து ஆசிம் உடனான நட்பையும், காதலையும் முறித்துக்
கொண்டுள்ளார்.
புகைப்படங்களை
மார்ஃபிங் செய்து வெளியிடுவேன்
அந்த பெண் திடீரென பேசாமல் போனைதை
பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞன், தனது குரூர புத்தியை காட்டத்
தொடங்கியுள்ளான். முகநூல் மூலம் அந்த பெண் அனுப்பிய புகைப்படங்களை மார்ஃபிங்
செய்து வெளியிடுவேன் என்றும், இருவருக்கும் இடையிலான ரகசிய சாட்டிங்கை
வெளியிடுவேன் என்றும் மிரட்ட ஆரம்பித்துள்ளான்.
புகைப்படத்தை
வெளியிடாமல் இருக்க பணம்
இதையடுத்து அந்த தனக்கு வீட்டில்
திருமணம் செய்து வைக்க உள்ளதாகவும், தன்னை விட்டுவிடுமாறும் அந்த பெண்
கெஞ்சியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆசிம்,
புகைப்படத்தை வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்கும்படி கேட்டு அந்த பெண்ணை
மிரட்டியுள்ளார்.
மகள்
கூறியதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி
இதனால் என்ன செய்வது என்று அறியாத அந்த
பெண் விவகாரம் முற்றுவதை உணர்ந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் உடனடியாக இந்த
பிரச்னையை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மகள் கூறியதை கேட்ட பெற்றோர்
அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து மகளை திட்டியுள்ளனர். உடனடியாக அவர்கள்
ஆசிம் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பணம்
பறிப்பதே தொழில்
வழக்குப் பதிவு செய்த போலீசார், நூரல்
ஆசிமை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தான் பல உண்மைகள்
வெளிவந்துள்ளது. ஆசிம் பேஸ்புக் பெண்களை நட்பாக்கி, தனது பாலியல் வலையில்
வீழ்த்துவதும், பின்னர் அவர்களிடம் இருந்து பணம் பறிப்பதையே தொழிலாக வைத்திருந்தது
தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் காலத்தில் நமது
அறிவையும் வளர்த்துக் கொள்வதோடு அதை பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது முக்கியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக