Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

ஹா இதத்தானே இத்தனை நாளா எதிர்பார்த்திருந்தோம்! இந்தியாவில் அறிமுகமாகும் புதிய தயாரிப்பு வகை!


புதிய வீடியோ டீஸர்


ரெட்மி இந்திய நிறுவனம், இந்தியாவில் புதிய தயாரிப்பு வகை அதாவது, புதிய கேட்டகிரி வகை சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது என்று தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. இந்த புதிய சாதனம் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ரெட்மி நிறுவனத்தின் லேப்டாப் மாடலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வீடியோ டீஸர்
ரெட்மி இந்தியா நிறுவனம், அதன் டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. புதிய கேட்டகிரி வகை சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது என்று கூறி இந்த விடியோவை பதிவிட்டுள்ளது. இருப்பினும் வீடியோவில் அதிக தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை. சூட்சமமாக ரெட்மி நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஸ்மார்ட்போனா அலல்து லேப்டாப்பா?
ரெட்மி நிறுவனம், இந்தியாவில் இன்று அதன் வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் ரெட்மியின் முக்கிய தயாரிப்பான ரெட்மி 9 ஏ அறிமுகம் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் டீஸர் நிச்சயம் புதிய தயாரிப்பு ஸ்மார்ட்போன் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் முன்பே ஸ்மார்ட்போன் கேட்டகிரி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமியின் இந்தியத் தலைவர் மனும்குமார் ஜெயின்
புதிய வகை வெளியீடு சியோமியின் துணை பிராண்டு நிறுவனத்தின் ரெட்மி புக் லேப்டாப்பாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. சியோமியின் இந்தியத் தலைவர் மனும்குமார் ஜெயின், சில நாட்களுக்கு முன்பு இன்டெல் நிறுவனத்திற்குச் சென்றதாகக் கூறி ஒரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்மி நிறுவனம், சீனாவில் மி மற்றும் ரெட்மி லேப்டாப்களை விற்பனை செய்து வருகிறது.
ரெட்மி புக் லேப்டாப் மாடல் விபரம்
சீனாவில் ரெட்மி புக் லேப்டாப் இரண்டு அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி புக் 13' இன்ச் டிஸ்பிளே கொண்ட ஒரு மாடல் வேரியண்ட்டாகவும், மற்றொன்று 14' இன்ச் டிஸ்பிளே கொண்ட மாடல் வேரியண்ட்டாகவும் விற்பனை செய்து வருகிறது. சியோமி இந்த புதிய லேப்டாப்களில் சமீபத்திய 10வது ஜென் இன்டெல் கோர் i5 மற்றும் கோர் i7 பிராசஸர்களை பயன்படுத்தியுள்ளது.
சியோமி ரெட்மி லேப்டாப்
சீனாவில் விற்பனையாகும் தற்போதைய தலைமுறை ரெட்மி புக்கில், 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் அனைத்து மாடல்களிலும் தரமாக வருகிறது. இந்த சியோமி ரெட்மி லேப்டாப்-ல் என்விடியா எம்எக்ஸ் 250 கிராபிக்ஸ் கார்டும் வழங்கப்படுகிறது.
மதியம் 12 மணிக்கு அறிமுகம்
பலர் ரெட்மி அறிமுகம் செய்யும் இந்த புதிய கேட்டகிரி லேப்டாப்பாக இருக்கும் என்று கருதினாலும், இன்னும் சிலர் இது நிறுவனத்தின் பவர் பேங்க் ஆக இருக்கக் கூடும் என்று கருதுகின்றனர். எவ்வாறாயினும், இன்று மதியம் 12 மணிக்கு நிறுவனத்தின் நிகழ்ச்சி நடப்பதினால், நிச்சயம் இதற்கான முடிவு இன்று நமக்குத் தெரிந்துவிடும்.
புதிய Mi 10 மற்றும் Mi 10 Pro
சாம்சங்கின் குளோபல் அன்பேக்குடு ஈவென்ட் நிகழ்வும் இதே நாளில் நடக்கிறது. சாம்சங் தனது புதிய கேலக்ஸி போல்ட் மற்றும் சாம்ஸங் கேலக்ஸி S20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சியோமி, புதிய புதிய Mi 10 மற்றும் Mi 10 Pro போன்களை பிப்ரவரி 13ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக