Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

39 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் கில்லாடி இந்தியர்... அடேங்கப்பா அசைக்க முடியாத கின்னஸ் சாதனை...!


Most Bizarre Families Around The World
லகின் மிகவும் ஆச்சரியமான விஷயங்களில் ஒன்று குடும்பமாகும். குடும்பம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் நமது அனைத்து இக்கட்டான சூழ்நிலையிலும் நமக்கு உறுதுணையாகவும், ஆறுதலாகவும் இருப்பது நம்முடைய குடும்பம்தான். நமது குடும்பம்தான் எப்போதும் சிறந்தது என்ற எண்ணம் நமக்குள் எப்போதும் இருக்கும். ஆனால் நமது குடும்பம் வித்தியாசமானதா என்றால் இல்லை என்றுதான் கூறுவோம்.
உலகில் சில வித்தியாசமான குடும்பங்கள் இருக்கிறது. இந்த குடும்பங்கள் வித்தியாசமானது மட்டுமல்ல ஆச்சரியமானவையும் கூட. ஏனெனில் அதிகளவு உறுப்பினர்கள் முதல் அதிக பேரை குடும்பமாக கொலை செய்தது வரை பல வித்தியாசமான குடும்பங்கள் இந்த உலகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த பதிவில் இதுவரை வெளியுலகத்திற்கு தெரிந்துள்ள சில விசித்திரமான குடும்பங்களை பற்றி பார்க்கலாம்.
தி சானா பேமிலி
மேலே படித்த டகர் குடும்பம்தான் உலகின் மிகப்பெரிய குடும்பம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் தவறாகும். ஏனெனில் சியோனா சானா என்ற மிசோராமை சேர்ந்த இந்தியர் 39 பெண்களை திருமணம் செய்து 94 குழந்தைகளுடனும், 14 மருமகள்களுடனும், 34 பேரக்குழந்தைகளுடனும் மொத்தம் 180 குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பஸ்தன் என்ற கின்னஸ் சாதனையை செய்துள்ளார்
தி மார்ஷல் பேமிலி
இந்த குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் போலி மார்பங்கள் பெற அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள். இந்த குடும்பத்தில் இருக்கும் பிரிட்னி மார்ஷல் என்ற ஒரு பெண்ணைத் தவிர மீதமுள்ள அனைத்து பெண்களுக்கும் மிகப்பெரிய மார்பகங்கள் இருக்கிறது. 4 சகோதரிகளை கொண்ட இந்த பெண் தன்னுடைய சகோதரிகள் போல மார்பக அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்ற உறுதியுடன் உள்ளார். பெரிய மார்பகங்கள் இருப்பதாலேயே இவர்கள் குடும்பம் உலகின் விசித்திரமான குடும்பங்களில் ஒன்றாக இருக்கிறது.
தி மேன்சன் பேமிலி
சார்லஸ் மேன்சன் என்பது உலகின் மிகவும் மோசமான மற்றும் பிரபலமான தொடர் கொலையாளிகள் ஆவர். இசைக்கலைஞராக இருந்து குற்றவாளியாக மாறிய இவர்கள் 1969 முதல் 1971 வரை பல கொலைகளை செய்தனர். தன்னை கிறிஸ்து என்று கடுமையாகக் கூறிக்கொண்ட சார்லஸ், மக்களைக் கொல்வதன் மூலம் ஒரு பேரழிவு இனப் போரைக் கொண்டுவருவார் என்று கூறப்பட்டது. மேன்சன் உண்மையில் ஒரு குடும்பம் அல்ல, பல குற்றங்களைச் செய்த குற்றவாளிகளின் குழுவாகும்.
போட்கோபேவ் பேமிலி
கணவன், மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொண்ட ஒரு ரஷ்ய குடும்பம், இவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேரைக் கொன்றனர். அவர் எண்ணற்ற எண்ணிக்கையிலான கொள்ளைகளைச் செய்தார், மேலும் பலரைக் கொல்வதற்கு முன்பு சித்திரவதை செய்தார். இருப்பினும், அவர்களின் மகள் விக்டோரியா மிகவும் அதிர்ஷ்டசாலி அல்ல, ஏனெனில் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டாள். இறுதியில் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். ஆனால் அதற்குள் இவர்களால் பல உயிர்கள் பறிபோய்விட்டது.
தி ஃபிரிட்ஸ் பேமிலி
2008 ஆம் ஆண்டில் ஃபிரிட்ஸ் வழக்கு உலகளவில் கவனத்தை ஈர்த்தது. எலிசபெத் ஃபிரிட்ஸ்ல் ஆஸ்திரியாவின் உள்ளூர் போலீசாரிடம் தனது தந்தை ஜோசப் ஃபிரிட்ஸால் 24 ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்டதாக கூறினார். அவர் அவளை அடித்தளத்தில் பூட்டியது மட்டுமல்லாமல், 24 ஆண்டுகளாக சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மேலும் மோசமான விஷயம் என்னவெனில் இந்த பாலியல் துஷபிரோயோகத்தின் விளைவாக 8 குழந்தைகள் பிறந்தனர். இதில் 4 குழந்தைகள் தாயுடன் இருந்தனர், இ குழந்தை பிறந்த சில நாட்களில் சுவாசப் பிரச்சினையால் இறந்தது, 3 குழந்தைகளை ஜோசப் ஃபிரிட்ஸ்ல் மற்றும் அவரது மனைவி வளர்த்தனர். கெர்ஸ்டின் என்ற மூத்த மகள் கடுமையாக நோய்வாய்ப்பட்டபோது, ஜோசப் எலிசபெத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதித்தார். இந்த சமயத்தில்தான் இந்த வழக்கு வெளிவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக