Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

ஐயய்யோ எங்க டாய்லெட்ட காணலயே.. ரூ.540 கோடியை ஆட்டையை போட்ட ஆசாமிகள்..!


போலியாக போட்டோ
டிகர் வடிவேலு படத்தில் ஐயா என் கிணத்த காணவில்லை, கிணறு வெட்டின ரசீது இருக்கு. இத வச்சு என் கிணத்த கண்டுபிடிச்சு கொடுங்க என்று கூறியது போல, மத்திய பிரதேசத்தில் 4.5 லட்சம் கழிப்பறைகள் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கட்டபட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் அதை ஆய்வு செய்யும் போது காணவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, ஸ்வச் பாரத் என்ற தூய்மை இந்தியா திட்டத்தில் அதிக கவனம் செலுத்தியது. மேலும் நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்படும் என உறுதியளித்தது.
மேலும் நாடு முழுவதும் 90% இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி கிடைத்துள்ளது. ஆனால் தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2014-ம் ஆண்டு வரை 40% இந்தியர்களுக்குத் தான் கழிப்பறை வசதி இருந்தது என பிரதமர் நரேந்திர மோடி முன்னர் ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.
கழிப்பறையில் முறைகேடு
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் 540 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மொத்தம் 4.5 லட்சம் மொத்தம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக ஆவணங்களில் மட்டுமே இருக்கிறது. அதற்கான போட்டோ மட்டுமே சமர்பிக்கப்பட்ட நிலையில், அங்கு கழிப்பறைகள் இல்லையென கூறப்படுகிறது.
விரைவான நடவடிக்கை
சில கிராமாவாசிகளும் பழங்குடியினரும் விரைவான நடவடிக்கை எடுக்க கோரி அழுத்தம் கொடுத்த பின்பு, அதிகாரிகளிடம் இது பற்றி புகார் அளித்த பின்பே இந்த விஷயம் வெட்ட வெளிசத்துக்கு வந்தது என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்தது. இதில் கொடுமை என்னவெனில் நான்கு ஸ்வச் பயனாளிகளுக்கு தங்கள் பெயரில் கழிப்பறைகள் கட்டப்பட்டதே தெரியாதாம்.
போலியாக போட்டோ
இதில் கொடுமை என்னவெனில் ஒவ்வொரு பயனர்களும் அவர்களின் கழிவறைக்கு முன்பு உள்ள போட்டோவையும் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் நான்கு பேரும் மற்றவர்கள் வீட்டு கழிவறைகள் முன்பு நின்று போட்டோ எடுத்துள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மோஸ்ட்
லக்காட் ஜாம் பஞ்சாயத்தில் நடைபெற்ற இந்த மோசடியில் பங்கு கொண்டுள்ள 4 பேரிடம் இருந்து 7 லட்சம் ரூபாயை மீட்கவும் நடவடிக்கை எடுகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஸ்வச் பாரத் மிஷன் மத்திய பிரதேசத்தின் துணை இயக்குனர் அஜித் திவாரி தினசரி செய்திக்கு 2012ல் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஸ்வச் பாரத் பணி நிறைவு
அங்கு 62 லட்சம் வறுமை நிலைக் குடும்பங்கள் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கழிப்பறைகளின் கட்டுமானம் அக்டோபர் 2, 2018 அன்று நிறைவடைந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவை உண்மையான தகவலா என்பதை உறுதிப்படுத்த 21,000 தன்னார்வலர்களைப் பயன்படுத்தி ஒரு கணக்கெடுப்பு மற்றும் உடல் சரிபார்ப்பை நடத்தினோம்.
4.5 லட்சம் கழிவறைகளை காணவில்லை
ஆனால் அந்தக் கணக்கெடுப்பில் சுமார் 4.5 லட்சம் கழிப்பறைகள் காணவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மேலும் இவர்கள் பல தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஏமாற்றியுள்ளனர் என்றும், இதன் மூலம் சுமார் 540 கோடி ரூபய் மோசடி நடைபெற்றுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக