பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி சேவைகளை அனைத்து
இடங்களிலும் அறிமுகப்படுத்துவது பற்றிய வதந்திகளை நாம் பல மாதங்களாக கேட்டு
வருகிறோம். குறிப்பாக பான்-இந்தியா பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு இன்னமும் ஒரு
கனவுதான் என்றாலும் கூட இந்த பொதுத்துறை நிறுவனம் இப்போதுள்ள 3ஜி ஸ்பெக்ட்ரத்தை
பயன்படுத்தி தேர்தெடுக்கப்பட்ட வடங்களில் அதன 4ஜி சேவைகளை வழங்கி வருகிறது.
பிஎஸ்என்எல்
4ஜி
பிஎஸ்என்எல் 4ஜி சேவை கிடைக்கும்
வட்டங்களில், இரண்டு புதிய 4ஜி-ஒன்லி திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் ஒரு
திட்டம் நாள் ஒன்றுக்கு 10ஜிபி டேட்டா, 84நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது,
மொத்தமாக 840ஜிபி டேட்டா அந்த திட்டதில் கிடைக்கும். மேலும் இந்த இரண்டு
திட்டங்களைப் பற்றி விரவாகப் பார்ப்போம்.
ரூ.96
மறறும் ரூ.236 என்கிற இரண்டு திட்டங்கள்
பிஎஸ்என்எல் 4ஜி திட்டங்கள்
என்னவென்றால், ரூ.96 மறறும் ரூ.236 என்கிற இரண்டு திட்டங்கள் ஆகும். இந்த
திட்டங்கள் வெறும் டேட்டா நன்மைகளை மட்டுமே வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையை கூற வேண்டும் என்றால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகைகள், அழைப்பு
நன்மைகள் எதவும் கிடைக்காது.
ரூ.96-திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி திட்டமான
ரூ.96-திட்டம் நாள் ஒன்றுக்கு 10ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந்த திட்டத்தின்
வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். அதாவது இந்த திட்டத்தில் மொத்தமாக 280ஜிபி அளவிலான
டேட்டா நன்மைகள் கிடைக்கும்.
ரூ.236
திட்டம்
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி
திட்டமான ரூ.236 திட்டத்தில் தினசரி 10ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின்
வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். மொத்தமாக இந்த திட்டத்தில் 840ஜிபி அளவிலான டேட்டா
நன்மைகள் கிடைக்கும்.
4ஜி
சேவை
பிஎஸ்என்எல் 4ஜிப சேவையானது தற்சமயம்
சென்னை மற்றும் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா, மற்றும்தெலுங்கானா,
கொல்கத்தா,மகாராஷ்டிரா,மத்திய பிரதேசம், கர்நாடகா, குஜராத் போன்ற பகுதிகளில்
கிடைக்கிறது. ஆனால் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் 3ஜி ஸ்பெக்ட்ரத்தை
பயன்படுத்தி 4ஜி சேவையை அறிமுகப்படுத்த பிஎஸ்என்எல் தீவிராமாக செயல்பட்டு
வருகிறது.
தொடர்ந்து
வழங்குமா ?
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த
வருடம் அதன் 4ஜி சேவையை முழுவதும் வணிக ரீதியாக அறிமுகப்படுத்தியவுடன், இந்த
இரண்டு 4ஜி திட்டங்களையும் தொடர்ந்து வழங்குமா அல்லது முற்றிலும் புதிய 4ஜி
திட்டங்களை கொண்டு வருமா என்பதில் உறுதிப்பாடு இல்லை. ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனம்
அதன் 4ஜி நெட்வொர்க்கை இயக்கிய வட்டங்களில் இந்த இரண்டு திட்டங்களையும் ரீசார்ஜ்
செய்ய திறந்து விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அழைப்பு
நன்மைகள் இல்லை
குறிப்பாக இந்த இரண்டு பிஎஸ்என்எர் 4ஜி
திட்டங்களுக்கு தகுதி பெற, வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டை
அருகிலுள்ள கஸ்டமர் கேர் மையத்திலிருந்து பெற வேண்டும். மேலும் ஜியோ நிறுவனத்திடம்
பிஎஸ்என்எல் போன்ற 4ஜி திட்டங்கள் எதுவும் இல்லை என்றுதான் கூறவேண்டும், ஜியோ
ரூ.251-திட்டத்தில் 2ஜிபி
அளவிலான டேட்டா நன்மைகளுடன் 51நாட்கள்
வேலிடிட்டி கொடுக்கிறது. ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 4ஜி திட்டங்களில்
அழைப்பு நன்மைகள் இல்லை என்பதால் சற்று வருத்தம் அளிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக