கைலாசாவுக்கு குடியுரிமை கேட்டு சுமார் 40 லட்சம் பேர்
விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
குழந்தை கடத்தல் வழக்கு, பாலியல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நித்யானந்தா மீது தொடுக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென தலைமறைவானார். மேலும் ஆண் சீடர்களுக்கும் நித்யானந்தா பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாகாவும் தற்போது புகார் எழுந்துள்ளது.
இதனிடையே வருகிற 18 ஆம் தேதிக்குள் நித்யானந்தாவை கண்டுபிடிக்க பெங்களூர் நீதிமன்றம் கர்நாடகா காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நித்யானந்தா சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் ”கைலாசா நாட்டை நான் அமைத்தே தீருவேன்” என தீர்க்கமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக