Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 மார்ச், 2021

9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..!

சீன கொரோனா தொற்று

கொரோனா பாதிப்பில் இருந்து வெளியேறிய முதல் நாடான சீனா உற்பத்தி, ஏற்றுமதி என அனைத்திலும் மிகவும் குறுகிய காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்தது சிறப்பான வளர்ச்சியை அடைந்தது.

ஆனால் பிப்ரவரி மாதம் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மந்தமான டிமாண்ட், திடீரென அதிகரித்த கொரோனா தொற்றுக் காரணமாகச் சீனாவின் தொழிற்துறை உற்பத்தி கடந்த 9 மாத சரிவை அடைந்துள்ளது.

இதனால் சீனாவின் வேலைவாய்ப்பு சந்தை தற்போது அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது எனத் திங்கட்கிழமை வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சீன கொரோனா தொற்று

சீனாவின் உற்பத்தியில் ஏற்பட்டு உள்ள இந்தச் சரிவு, இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இருக்கும் தடுமாற்றத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் சீனா கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளது எனக் கூறினாலும் தொடர்ந்து பல்வேறு இடத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

சீனா புத்தாண்டு விடுமுறை

பொதுவாகச் சீனாவில் பிப்ரவரி மாதம் வரும் லூனார் புத்தாண்டு விடுமுறையில் நகரங்கள் மற்றும் வெளியூர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊருக்கு விடுமுறைக்காகச் செல்வது வழக்கம், ஆனால் இந்த ஆண்டுக் கொரோனா தொற்று பயத்தின் காரணமாகப் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

சீன உற்பத்தி அளவீடு

இந்நிலையில் மார்கிட் உற்பத்தி பிஎம்ஐ குறியீடு பிப்ரவரி மாதத்தில் 50.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. இதன் 2020 மே மாதத்துடன் குறைவான அளவீடாகும். இதேவேளையில் உலக நாடுகள் உற்பத்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் சீனா ஜனவரி மாத்தின் 51.5 புள்ளிகள் அளவீட்டில் இருந்து குறையாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைந்துள்ளது.

சீனா வேலைவாய்ப்பு சந்தை

இதேபோல் சீனாவிற்கு வரும் ஏற்றுமதி ஆர்டர்களின் எண்ணிக்கையும் 2வது மாதமாகத் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் 3வது மாதமாகத் தொழிற்சாலைகள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் பிற துறைகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது இல்லை.

சீன பொருளாதாரம்

இந்நிலையில் கடந்த வாரம் HSBC வெளியிட்ட கணிப்பில் சீனா பொருளாதாரம் இந்த ஆண்டு 8.5 சதவீதம் வரையில் உயரும் எனக் கணித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கொரோனாவில் இருந்து மீண்டு வரும் நாடுகள் மத்தியில் சீனா தான் அதிகப்படியான வளர்ச்சி அடையும் நாடாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.


,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக