இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
முக்கூர்த்தி
தேசிய பூங்கா நீலகிரியிலிருந்து ஏறத்தாழ 102கி.மீ தொலைவிலும், கோவையிலிருந்து
சுமார் 146கி.மீ. தொலைவிலும், குன்னூரிலிருந்து சுமார் 88கி.மீ. தொலைவிலும்,
ஊட்டியிலிருந்து 81கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
முக்கூர்த்தி
தேசிய பூங்கா நீலகிரியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா ஊட்டி
மலையின் மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக மிகவும் ரம்மியமாகவும்,
இயற்கை சூழல் நிறைந்த பகுதியாகவும் உள்ளது.
குறிப்பாக,
தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகள், புலி உட்பட பல்வேறு வன உயிரினங்களின்
வாழ்விடமாகவும் இது உள்ளது. இப்பூங்கா இந்தியாவில் உள்ள முதல் சர்வதேச
பாதுகாக்கப்பட்ட உயிர்கோளப் பகுதியாகும்.
இந்த
இடத்தில் தேசிய பூங்கா அமைக்கப்பட முக்கிய காரணம், நீலகிரியின் தார் வகையைப்
பாதுகாக்கவே. இது நீலகிரி பல்லுயிர் வலயத்தின் ஒரு பகுதியாகும். இந்த தேசிய பூங்கா
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மையமாகத் திகழ்கிறது.
இப்பூங்காவில்
மலைசார் புல்வெளிகளும், குற்றுச் செடிகளும் காணப்படுகின்றன.
இங்குள்ள
உயரமான மலைப்பகுதிகளில் மழை மற்றும் காற்றுடன் சூரிய ஒளி ஊடுருவதைப் பார்ப்பது
கண்கவரும் நிகழ்ச்சியாகும்.
இப்பகுதி
புல்வெளிகளையும், சோலைக் காடுகளையும் உள்ளடங்கியது. மேலும் பல அழியும் தருவாயில்
உள்ள உயிரினங்களின் தாயகமாக உள்ளது.
இங்கு ஆசிய யானைகள், வங்கப்புலிகள்,
சிறுத்தைகள், நீலகிரி கீரிகள், நீலகிரி லங்கூர்கள், சாம்பார் மான்கள், குரைக்கும்
மான்கள், காட்டுப்பூனைகள், காட்டு நாய்கள், கருப்புக்கழுகுகள், மரப்புறாக்கள்,
மரத்தவளைகள், பலவித வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன.
வரையாடு
இப்பகுதிக்கே உரித்தான விலங்கு. இப்பூங்கா முன்னர் வரையாட்டின் ஆங்கிலப் பெயரான
நீலகிரி தார் தேசியப்பூங்கா என்றே அழைக்கப்பட்டது.இந்த
பூங்காவிலீருந்து காலார நடந்து சென்றால் முக்கூர்த்தி அணையைக் காணலாம்.
எப்படி செல்வது?
ஊட்டியிலிருந்து
பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
குன்னூரில்
பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக