Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 17 டிசம்பர், 2019

95,000 கோடி ரூபாய் கடன்.. சீனாவுடன் கைகோர்க்கும் டாடா மோட்டார்ஸ்..!

சீனா நிறுவனங்கள்
ரு காலத்தில் இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் கொடிகட்டிப் பறந்த டாடா மோட்டார்ஸ் தற்போது போட்டியின் காரணமாகப் பெரிய அளவில் வர்த்தகம் ஏதும் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் தனது கடனை குறைக்கவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும் புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது.
இதன் படி டாடா மோட்டார்ஸ் தற்போது சீனா ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து வர்த்தகம் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது வெற்றி அடைந்தால் டாடா மோட்டார்ஸ் கடனை குறைப்பது மட்டுமல்லாமல் அதிகளவிலான வர்த்தகத்தையும் பெறும்.
பேச்சுவார்த்தை
டாடா மோட்டார்ஸ் தற்போது இரண்டு சீன ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் சீன நிறுவனங்கள் நேரடியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அல்லது புதிய நிறுவனத்தைக் கூட்டணி முறையில் அமைக்கும்.
இதில் எது நடந்தாலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஜாக்பாட் தான். வர்த்தகமே இல்லாத டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்குச் சீன நிறுவனங்களின் புதிய கூட்டணி பெரிய லாபத்தைத் தரும்.
முக்கியப் பணிகள்
இப்புதிய கூட்டணிகள் மூலம் எலக்ட்ரிக் கார்களுக்கான தொழில்நுட்பத்தைத் தயாரித்தல், உற்பத்தி தளத்தை உருவாக்குதல், இன்ஜின் மற்றும் இதர கார் தயாரிப்புக்கான தளத்தை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். இவை அனைத்தையும் தாண்டி இந்தியா என்னும் மிகப்பெரிய வர்த்தகச் சந்தை கிடைக்கும்.
சீனா நிறுவனங்கள்
கடந்த சில வருடங்களில் சீனா ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஜெர்மன், ஸ்வீடன், பிரென்ச் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது. இப்படியிருக்கும் நிலையில் இந்தியச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வது என்பது சீன நிறுவனங்களுக்குப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.
அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் இதுவரை எலக்ட்ரிக் கார்களுக்கான வர்த்தகமும், தொழில்நுட்பமும் இல்லாமல் இருக்கும் நிலையில் சீன நிறுவனங்களுக்கு இது பெரிய வாய்ப்பாக இருக்கும்.
கடன்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தின் கடன் அளவு மட்டும் 23,365.49 கோடி ரூபாய். டாடா மோட்டார்ஸின் பிரிட்டன் வர்த்தகப் பிரிவான ஜாகுவார் லேண்டு ரோவர் வர்த்தகக் கடனையும் சேர்த்தால் 95,465.08 கோடி ரூபாயாகும்.
இந்தக் கடனை தற்போது இருக்கும் வர்த்தகத்தால் டாடா மோட்டார்ஸ் நிச்சயம் தீர்க்க முடியாது. இதனால் டாடாவிற்குச் சீன நிறுவனங்களின் கூட்டணி மிகவும் அவசியமாகத் திகழ்கிறது.
வர்த்தகப் போர்..
அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர் நடந்து வரும் இந்தக் காலகட்டத்தில் சீனாவிற்கு வெளிநாட்டு வர்த்தகமும், கூட்டணியும் மிகவும் முக்கியமாகத் திகழ்கிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் டாடா மோட்டார்ஸ் உடனான கூட்டணி சீன நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக