Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 29 ஏப்ரல், 2020

ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணியாற்றும் நடைமுறை நீட்டிப்பு

இந்தியாவில் கொரொனாவால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 30,000 நெருங்கி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29,435 ஆக உயர்ந்ததுள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 23.3% ஆக அதிகரித்துள்ளது எனவும்,  இதுவரை 6,868 பேர் குணமடைந்துள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் நடைமுறையை வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

கொரொனா ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ஆம் நாள்வரை அமலில் உள்ள நிலையில், ஏற்கனவே நாட்டில் உள்ள ஐடி ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இம்மாதம் 30 ஆம் தேதிவரை நடைமுறையில் இருந்த வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை வரும் ஜுலை ஜூலை மாதம் 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!