Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 4 ஜனவரி, 2021

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 அப்டேட் வழங்கத் துவங்கியுள்ளது. முன்னதாக இதே அப்டேட் கேலக்ஸி நோட் 20, கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி நோட் 10 சீரிஸ் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

குறிப்பாக இந்த புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.0 சார்ந்த அம்சங்களை கேலக்ஸி இசட் ப்ளிப் ஸ்மார்ட்போனிற்கு வழங்குகிறது. அதாவது இதில் மேம்பட்ட யுஐ டிசைன், சிறப்பான அனிமேஷன், சாட் பபிள்கள், மேம்பட்ட ஸ்டாக் ஆப், லாக் ஸ்கிரீன் விட்ஜெட்கள், மேம்பட்ட செக்யூரிட்டி மற்றும் செயல்திறன் போன்றவை கிடைக்கிறது.

மேலும் இதனுடன் புதிய பிரைவசதி கண்ட்ரோல்கள், ஒன்-டைம் ப்ரமிஷன்கள், மேம்பட்ட டிஜிட்டல் வெல்பீயிங் அம்சங்கள் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. பின்பு பிரீமியம் ஸ்மார்ட்போன் மட்டுமினறி ஒன்யுஐ 3.0 அப்டேட் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி எம்31 மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!