தெரியாத்தனமாக உங்களுடைய முக்கியமான வாட்ஸ்அப் சாட்டை டெலீட் செய்து விட்டீர்களா? "போச்சு போச்சு எல்லாம் போச்சு" என்று நினைத்து பதட்டம் அடையாதீர்கள். டெலீட் ஆனா வாட்ஸ்அப் சாட் மெசேஜ்களை மீட்டெடுக்க வழி இருக்கிறது. ஆனால், இதற்கு நீங்கள் சில நிபந்தனைகளை உங்கள் போனில் செய்திருக்க வேண்டும். சரி, எப்படி டெலீட் ஆன வாட்ஸ்அப் மெசேஜ்களை ரீஸ்டோர் செய்வது என்று இந்த பதிவின் மூலம் கற்றுக்கொள்ளலாம். இந்த சூப்பர் டிப்ஸ் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கும் என்பதனால், பதிவை இறுதி வரை தொடர்ந்து படித்துப் பயன்பெறுங்கள்.
டெலீட்டான வாட்ஸ்அப் சாட்டை மீட்டெடுக்க முதல் முக்கியமான விஷயம் இது தான்
இந்த செயல்முறைகளைப் பின்பற்றுவதற்கு முன், உங்களுடைய வாட்ஸ் ஆப் சாட் பேக்அப் செய்யப்பட்டுள்ளதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாட்ஸ் ஆப் சாட்கள் பேக்அப் செய்யப்படவில்லை என்றால் நிச்சயம் நீங்கள் டெலீட் செய்த சாட்களை திரும்பப்பெற இயலாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் முன்பே சொன்னது போல், டெலீட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் சாட்களை மீட்டெடுக்க சில நிபந்தனைகளை நீங்கள் பின்பற்றியாக வேண்டும், அதில் மிக முக்கியமான நிபந்தனை இது தான். உங்கள் பேக் அப் விருப்பத்தை ஆனில் வைப்பது அவசியம்.
பேக் அப் செய்ய தனி ஒரு ஸ்டோரேஜ் இடம் தேவையா?
அடுத்தபடியாக நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயம், உங்கள் வாட்ஸ்அப் சாட் தகவலை பேக் அப் செய்து வைக்கத் தேவையான ஒரு ஸ்டோரேஜ் இடத்தை தேர்வு செய்யவும். டெலீட் செய்த வாட்ஸ் ஆப் சாட் மெசேஜ்களை உங்கள் ஆண்ட்ராய்டு போன் மற்றும் iOS போன்களில் எளிதாக பேக் அப் செய்து கொள்ள உங்களின் கூகுள் டிரைவ் பேக்அப் மற்றும் ஐகிளவுட் சேவையைப் பயன்படுத்த வேண்டும். இந்த சேவைகளை நீங்கள் வெறும் ஒரு சில கிளிக்கில் வாட்ஸ்அப் இல் இருந்தே ஆக்டிவேட் செய்யலாம். உங்கள் வாட்ஸ் ஆப் இல் நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் நிச்சயம் டெலீட் செய்த சாட்களை திரும்பப் பெற முடியாது.
வாட்ஸ் ஆப் சாட்களை பேக்அப் செய்வது எப்படி?
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் பேக்அப் சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது என்று பார்க்கலாம். உங்கள் வாட்ஸ் ஆப் செயலியை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ்(Settings) ஓபன் செய்யுங்கள்.
சாட்ஸ்(Chats) கிளிக் செய்யுங்கள்.
சாட் பேக்அப்(Chat backup) சென்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இதற்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள never, daily, weekly or monthly சேவையை கிளிக் செய்து உங்கள் சாட்களை பேக்அப் செய்துகொள்ளுங்கள்.
ஐபோனில் வாட்ஸ்அப் சாட்களை பேக்அப் செய்வது எப்படி?
உங்கள் ஐபோனில் எப்படி பேக்அப் சேவையை ஆக்டிவேட் செய்வது என்று பார்க்கலாம்.
உங்கள் ஐபோனில் வாட்ஸ் ஆப் செயலியை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ் (Settings) ஓபன் செய்யுங்கள்.
சாட்ஸ் (Chats) கிளிக் செய்யுங்கள். சாட் பேக்அப் (Chat backup) சென்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
ஆட்டோ பேக்அப் (Auto Backup) அல்லது பேக்அப் நௌ (Back Up Now) கிளிக் செய்யுங்கள்.
வாட்ஸ்அப் சாட்களை ரீஸ்டோர் செய்ய என்ன செய்ய வேண்டும்?
கிளவுட் சேவையைப் பயன்படுத்தி எப்படி உங்களின் டெலீட் ஆன வாட்ஸ்அப் சாட்களை ரீஸ்டோர் செய்ய முடியுமோ அதேபோல் நாம் உங்களுடைய மெமரி ஸ்டோரேஜ் இல் இருந்தும் பேக் அப் எடுக்க முடியும்.
முதலில் கிளவுட் சேவையைப் பயன்படுத்தி எப்படி வாட்ஸ்அப் சாட்களை ரீஸ்டோர் செய்வது என்று பார்க்கலாம்.
உங்கள் Android ஸ்மார்ட்போன் அல்லது ஐபோனிலிருந்து வாட்ஸ்அப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள். வாட்ஸ்அப் செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்து உங்கள் தொலைப்பேசி எண்ணுடன் பதிவு செய்யுங்கள்.
உங்கள் எண்ணைப் பதிவு செய்தவுடன் பேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய அனுமதி கேட்கும்.
இது மிகவும் முக்கியமானது மறக்காதீர்கள்
நீங்கள் ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால் கூகுள் டிரைவிலிருந்தும், ஐபோன் பயனராக இருந்தால் iCloud ஸ்டோரேஜில் இருந்தும் சாட்கள் பேக்அப் செய்யப்படும். பேக்ஆப் ஆல் சாட் என்ற ஆப்ஷனை ஒருமுறை கிளிக் செய்யவும். உங்கள் சாட்களை பேக்அப் செய்தால், பேக்அப் தேதிக்கு முந்தைய சாட்கள் டெலீட் செய்யப்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். பேக்அப் தேதிக்கு முந்தைய சாட்கள் டெலீட் செய்யப்பட்டால் கண்டிப்பாக அதை மீட்டெடுக்க வழி இல்லை என்பதை நினைவில் கொள்க.
மெமரி பேக்அப் இல் இருந்து வாட்ஸ்அப் சாட் ரீஸ்டோர் செய்யும் முறை
அடுத்தபடியாக டெலீட் ஆன வாட்ஸ்அப் சாட்களை மெமரி பேக் அப் சேவையின் மூலம் எப்படி மீட்டெடுப்பது என்று பார்க்கலாம். டெலீட் ஆன சாட்களை ஆண்ட்ராய்டு மெமரி பேக்அப் இல் இருந்து ரீஸ்டோர் செய்யும் முறையைச் சரியாகப் பின்பற்ற நீங்கள், உங்களுடைய போனில் உள்ள File Manager ஆப்ஸை கிளிக் செய்ய வேண்டும். அதில் காணப்படும் WhatsApp ஃபோல்டரை கிளிக் செய்யுங்கள். அடுத்தபடியாக வாட்ஸ்அப் ஃபோல்டரில் இருக்கும் Database கிளிக் செய்யுங்கள். இங்கு தான் உங்கள் பேக்அப் டேட்டா ஃபைல்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
வாட்ஸ் ஆப் பேக்அப் பைலை டெலீட் செய்ய வேண்டுமா?
msgstore.db.crypt12 என்ற ஃபைல் பெயரை msgstore_BACKUP.db.crypt12 என்று மாற்றிக்கொள்ளுங்கள். இந்த ஃபார்மட் msgstore-YYYY-MM-DD.1.db.crypt12 அடிப்படியில் பல ஃபைல்கள் இருக்கும் ரிசென்ட் ஃபைலை கிளிக் செய்து, msgstore.db.crypt12 என்று பெயர் மாற்றம் செய்யுங்கள். இப்பொழுது உங்கள் கூகுள் டிரைவில் உள்ள மூன்று புள்ளியை கிளிக் செய்து அந்த வாட்ஸ் ஆப் பேக்அப் பைலை டெலீட் செய்யுங்கள்.
லோகல் மெமரியில் இருந்து வாட்ஸ்அப் சாட்களை ரீஸ்டோர் செய்ய என்ன செய்ய வேண்டும்?
உங்கள் Android ஸ்மார்ட்போனிலிருந்து வாட்ஸ்அப்பை அன்இன்ஸ்டால் செய்யுங்கள். வாட்ஸ்அப் செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்து உங்கள் தொலைப்பேசி எண்ணுடன் பதிவு செய்யுங்கள். உங்கள் எண்ணைப் பதிவு செய்தவுடன் பேக்அப் டிரைவிலிருந்து சாட்களை ரீஸ்டோர் செய்ய அனுமதி கேட்கும். இப்பொழுது உங்கள் மொபைல் இல் உள்ள லோகல் மெமரியிலிருந்து பேக்அப் சாட் எடுத்துக்கொள்ளப்படும். Restore கிளிக் செய்தால் டெலீட் செய்யப்பட்ட உங்கள் சாட்கள் திரும்பக் கிடைத்துவிடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக