Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 ஜூன், 2019

ஏழைகளின் ஊட்டி - ஏற்காடு !!

Related image

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடை வாழிடம் தான் ஏற்காடு. இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சிறப்புகள் :

இங்கே அழகிய ஒரு ஏரியும், நிறைய மரங்களும் உண்டு. ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரி   காடு என்பதே மருவி ஏற்காடு என்றாகிவிட்டது.

சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இந்த ஊரில் ஆரஞ்சுப்பழத்தோட்டம், காபி தோட்டங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. வருடத்திற்கு ஒரு முறை கோடை விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

எப்படி செல்வது?

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் சேலத்திற்கு ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது. சேலம் ரயில் நிலையத்திலிருந்து ஏற்காட்டிற்கு பேருந்து மற்றும் ஆட்டோ மூலம் செல்லலாம்.

விமானம் வழியாக :

சேலம் (40 கிமீ), திருச்சி (163 கிமீ)

பேருந்து வழியாக :

சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு உடனுக்குடன் பேருந்து வசதி உள்ளது. சேலம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், புதுச்சேரி, திருப்பதி போன்ற அனைத்து நகரங்களுக்கும் பேருந்து வசதியுள்ளது.

செல்லும் காலம் :

அக்டோபர் முதல் மார்ச் வரை சிறந்த சீசன். மற்ற காலங்களிலும் செல்லலாம்.

குளிர்காலத்தில், மலைகள் முழுவதும் மூடுபனி படர்ந்திருக்கும்.

எங்கு தங்குவது?

ஏற்காட்டில் பல்வேறு கட்டண தொகைகளுடன் தங்கும் விடுதிகள் ஏராளமாக உள்ளன.

பார்க்க வேண்டிய இடங்கள் :

அண்ணா பூங்கா.

ஏற்காடு ஏரி.

லேடி சீட்.

கிள்ளியூர் அருவி.

பகோடா பாயிண்ட்.

சேர்வராயன் கோவில்.

கரடியூர் காட்சி முனை.

ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி அம்மன் கோவில்.

நல்லூர் அருவி.

பட்டு பண்ணை, ரோஜா தோட்டம்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக