வெள்ளி, 5 ஜூலை, 2019

தாய விளையாட்டு

 Image result for தாய விளையாட்டு

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கிராமத்து விளையாட்டுக்கள் மிகவும் தொன்மை வாய்ந்தது. தற்போது கிராமத்து விளையாட்டுக்களை காண்பது என்பது மிகவும் அரிது. அரிதாகி கொண்டு வந்தாலும் இன்றுவரை பலரால் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றுதான் தாயம்.

எத்தனை பேர் விளையாடலாம்?

இரண்டு முதல் நான்கு பேர் வரை விளையாடலாம்.

விளையாட தேவையானது :

நான்முக தாயக்கட்டை

ஆறு சோழிகள் அல்லது ஒரு பக்கம் தேய்த்த புளியங்கொட்டைகள் வைத்தும் விளையாடுவார்கள்.

எப்படி விளையாடுவது?

தாயம் என்பது ஆட்டத்தை ஆரம்பிக்க சொல்லக்கூடிய வார்த்தை. இந்த சொல் ஆட்டத்தில் ஒன்றை குறிக்கும்.

இந்த விளையாட்டை பெரும்பாலும் நான்முக தாயக்கட்டையை வைத்துதான் விளையாடுவார்கள்.

நான்முக தாயக்கட்டையின் மூன்று பக்கங்களில் (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்தில் புள்ளி ஏதும் இருக்காது (0).

இரு நான்முக தாயக்கட்டைகளை உருட்ட வேண்டும். இரு தாயக்கட்டைகளின் விழும் எண்களை கூட்டுனால் 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) ஆகிய எண்கள் வரும்.

இதில் வரும் 1, 5, 6, 12 எண்களை சிறப்பாகக் கருதி மற்றொருமுறை தாயக்கட்டையை உருட்டுவது வழக்கம். இவ்வெண்கள் அடுத்தடுத்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தால் அதை விருத்தம் என அழைப்பதுண்டு.

இரண்டு முதல் நான்கு ஆட்டக்காரர்கள் ஆட்டத்தை துவக்கவேண்டும். ஒவ்வொரு ஆட்டக்காரரும் தனித்தனியான காய் வகைகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். காய்கள் உருவத்திலோ அல்லது நிறத்திலோ வேறுபட்டு இருக்க வேண்டும்.

ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவரும் ஆறு காய்களைக் மனைப் பகுதியில் வைத்து ஆட்டத்தை தொடங்க வேண்டும்.

தாயம் இட்டபின்னேதான் மனையிலிருந்து காய்களை முதற்கட்டத்தில் வைக்க வேண்டும். ஒரு கட்டத்தில் ஒரு ஆட்டக்காரரின் காய்களே இருக்க முடியும்.

அதேகட்டத்தில் வேறு ஆட்டக்காரரின் காய்கள் நுழைந்தால் முதலிருந்த காய்கள் வெட்டப்பட்டு மனைக்கு திருப்பி அனுப்பப்படும்.

சில கட்டங்களின் குறுக்கே இரு கோடுகள் இருக்கும். இவை சிறப்புக் கட்டங்கள். இக்கட்டங்களில் பல ஆட்டக்காரர்களின் காய்களும் சேர்ந்து இருக்க முடியும்.

1, 5, 6 அல்லது 12 ஆகிய எண்களுக்கு மறு ஆட்டம் உண்டு. பிறர் காய்களை வெட்டினாலும் மறு ஆட்டம் உண்டு, தாயக்கட்டையை உருட்டலாம்.

ஒரு முறை காய்கள் சுற்றி வந்த பின் திரும்பவும் மனைக்குள் செல்லவேண்டும். ஆனால் வேறு ஆட்டக்காரரின் காய்களை ஏற்கனவே வெட்டவில்லையென்றால் மனைக்குள் செல்ல முடியாது.

அப்படி மனைக்குள் செல்ல முடியாத காய்கள் கடைசி கட்டத்திலேயே தங்கிவிடும். சிலர் விதிமுறையை மாற்றி காய்களை சுற்றி சுற்றி வரவைப்பதும் உண்டு.

காய்கள் மனைப் பகுதியில் உள்ள கட்டத்துக்குள் ஏறிய பின் மீண்டும் மனைக்குள் புகுந்தால் அக்காய்களை பழம் என கருதி ஆட்டத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.

முதலில் எந்த ஆட்டக்காரர் 4 அல்லது 6 காய்களையும் பழமாக மாற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவராவார்.

பயன்கள் :

கைகளுக்கு வலுசேர்க்கும்.

புத்திக்கு வேலை கொடுக்கிறது.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...1 கருத்து:

  1. தாய விளையாட்டில் எதிரணி நமது காய்களை வெட்டவில்லை... நாம் பழத்திற்கு உள்ள சென்றால் போதுமானதா... நான்கு காய்களில் இரண்டு பழம் எடுத்தாச்சு... ஒரு காய் பழத்திற்கு உள்ள சென்றுவிட்டது... கடைசி காய் 5 போட்டு உள்ள சென்றுவிட்டது... இதோடு ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாமா அல்லது கையாட்டம் நிறைவு பெற வேண்டுமா.?

    பதிலளிநீக்கு

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்