Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

“மெதுவா போங்க தம்பி” – அறிவுரை சொன்ன நபர்களை அரிவாளால் போட்டுத் தள்ளிய பயங்கரம்..!

Image result for அறிவுரை சொன்ன நபர்களை அரிவாளால் போட்டுத் தள்ளிய பயங்கரம்..!    

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


பைக்கில் போனவர்களை பார்த்து ஒன்னும் பெரிசா சொல்லிவிடவில்லை.. “பார்த்து போங்கப்பா” என்றுதான் 2 பேர் சொன்னார்கள். இது ஒரு குத்தம்ன்னு 7 பேர் சேர்ந்து அவர்களை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளார்கள்!
தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். மெரைன் இன்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்திராகுமாரி, டெல்லியில் ஒரு பிரைவேட் காலேஜில் அசிஸ்டெண்ட் புரொபசர் ஆக உள்ளார்.
இவர்களுக்கு குழந்தை இல்லை. 2 மாசத்துக்கு முன்னாடி லீவில் தூத்துக்குடிக்கு முருகேசன் வந்துள்ளார். இவருடைய பள்ளி நண்பர் விவேக். எப்போது ஊருக்கு வந்தாலும் நண்பர்கள் பார்த்து பேசிக் கொள்வது வழக்கம்.
அப்படித்தான் சிவந்தாகுளம் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து மணிகண்டன் என்பவர் நண்பருடன் பைக்கில் அந்த பக்கமாக வந்தார்.
அது ஒரு குறுகலான தெரு போல தெரிகிறது. அந்த தெருவுக்குள் அவ்வளவு ஸ்பீடாக வண்டியை ஓட்டி வரவும், “ஏம்ப்பா.. தெருவுக்குள்ள ஏன் இவ்வளவு வேகமாக போறீங்க.. சின்ன பிள்ளைங்க குறுக்கே வந்தா என்ன ஆகறது? பார்த்து போங்கப்பா” என்று முருகேசன் சொல்லி உள்ளார்.
இதுதான் பிரச்சனை.. பைக்கில் இருந்து இறங்கி வந்த 2 பேரும் இதுஒரு விஷயம் என்று எடுத்து கொண்டு, முருகேசனிடம் சண்டைக்கு வந்துவிட்டனர். இது தகறாக மாறியது.
மணிகண்டன் முருகேசனை தாக்கிவிட்டார். அப்பவும் விடாத மணிகண்டன் போனை போட்டு நண்பர்களை வரவழைத்தார். உடனே 3 பைக்கில் ஏழு பேர் அரிவாளுடன் வந்துவிட்டனர்.
என்ன ஏதென்றுகூட விசாரிக்காமல் முருகேசனை அரிவாளால் போட்டு தள்ளியது.. தடுக்க முயன்ற நண்பர் விவேக்கையும் வெட்டி சாய்த்து தப்பியது கும்பல். நண்பர்கள் 2 பேருமே அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
இந்த இரட்டை கொலை சம்பந்தமாக 2பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!