இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆவின் பால் விற்பனையகத்தில் ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆவின் மேலாளர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காலாவதியான
பால் பாக்கெட் விற்றதால் அதிர்ச்சி- ஆவின் ஊழியருக்கு தண்டனை!
ஹைலைட்ஸ்
- காலாவதியான பால் பாக்கெட் விற்பனை
- ஊழியரை இடைநீக்கம் செய்த நிர்வாகம்
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக
ஆவின் செயல்பட்டு வருகிறது. இது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும்
விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வருகிறது.
தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் நெய், வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களின் விலை, கடந்த மாதம் உயர்த்தப்பட்டது.
இது சாதாரண மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆவின் பால் விற்பனையகம் ஒன்றில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ஆவின் பால் விற்பனை நிலையம் அமைந்துள்ளது.
இங்கு தியாகராஜன், வெங்கடேஷ் ஆகிய வாடிக்கையாளர்கள் பால் வாங்கியுள்ளனர். அதில் காலாவதியாகும் தேதி நேற்று எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், விற்பனையாளரிடம் முறையிட்டனர்.
வேறு பால் பாக்கெட் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு விற்பனையாளர் துளசிதாசன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதைக் கண்டு பொதுமக்கள் திரண்டதால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் ஆவின் விற்பனையகத்திற்கு வந்த மேலாளர் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு வேறு பாக்கெட் பால் தருவதாக தெரிவித்தனர். இதையடுத்து விற்பனையாளர் துளசிதாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆவின் பொது மேலாளர் ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக