இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
15
ஆண்டுக்கு மேல் பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூ.25,000 FC
கட்டணமாகப் பெறும் வகையில் இந்த ஸ்க்ராப்பேஜ் பாலிசி வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகில்
காற்று மாசு அதிகம் ஏற்படுத்தும் நாடுகளில் இந்தியா முக்கியமானது. இந்தக் காற்று
மாசை கட்டுப்படுத்த பிஎஸ்-6 விதிமுறைகள், மின்சார வாகனங்கள் போன்றவை வந்தாலும்,
இங்கே பழைய வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் காற்று மாசுபாட்டைக்
குறைப்பது கடினமான வேலையாகவே இருக்கிறது. இதனால், பழைய வாகனங்களை விற்பனை
செய்துவிட்டு புது வாகனங்கள் வாங்க மக்கள் தானாக முன்வர வேண்டும் என்பதற்காக
மத்திய அரசு கொண்டுவரும் திட்டம்தான் ஸ்க்ராப்பேஜ் பாலிசி.
ஏற்கெனவே
ஸ்க்ராப்பேஜ் பாலிசி வடிவமைக்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய சாலை போக்குவரத்து
அமைச்சகம், ஸ்க்ராப்பேஜ் பாலிசியில் சில மாறுதல்களைச் செய்து சம்பந்தப்பட்ட
அனைத்து துறையினரின் பார்வைக்கும் அனுப்பியுள்ளது. இதில் முக்கிய மாற்றமாக, 15
ஆண்டு பழைய வாகனங்களின் Fitness Certificate (FC) கட்டணத்தை 25 முதல் 125
சதவிகிதம் வரை உயர்த்தப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த
விதிமுறை அமலுக்கு வரும்போது 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் கமர்ஷியல்
டிரக் மற்றும் பேருந்துகளுக்கு வசூலிக்கப்படும் 200 ரூபாய் FC தொகை, 25,000
ரூபாயாக மாறும். கேப், டாக்ஸி மற்றும் மினி டிரக்குகளுக்கு இந்தத் தொகை 15,000
முதல் 20,000 ரூபாயாக உயரும். மேலும், கமர்ஷியல் வாகனங்களுக்கான பதிவை ஒவ்வோர்
ஆண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
புதிய
பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் பயன்பாட்டில் 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்
2 மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கான ரெனிவல் தொகை 300 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய்
வரை அதிகரிக்கப்படும். 4 சக்கர வாகனங்களுக்கு 600 ரூபாயாக இருக்கும் இந்தத் தொகை
15,000 ரூபாயாக மாறும். பிரைவேட் வாகனங்கள் இந்த ரெனிவல் சான்றிதழை ஒவ்வொரு 5
ஆண்டுகளுக்கும் வாங்க வேண்டும் என்கிறது விதிமுறை
வாகனங்களுக்கான FC கட்டணம்
ஸ்க்ராப்பேஜ்
பாலிசியில் இதற்கு முன்பு 10 ஆண்டுகளாக இருந்த காலக்கெடு கொஞ்சம் தளர்த்தப்பட்டு
15 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தக் கொள்கை நடைமுறைக்கு வரும்போது
பழைய வாகனங்கள் அதிகமாகச் சாலையிலிருந்து வெளியேற்றப்படும் என்றும் புதிய
வாகனங்களுக்கான விற்பனை அதிகமாகும் என்றும் மஹிந்திரா, பாரத் பென்ஸ் உட்பட பல
நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
இதனால்
எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படும் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தியாவின் மிகப்பெரிய
போக்குவரத்துக் கழகமான தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தை உதாரணமாக
எடுத்துக்கொள்வோம்.
இந்தியாவில் உள்ள 47 போக்குவரத்துக்
கழகங்களில் 2015-2016 நிலவரப்படி காலாவதியான பேருந்துகளை இயக்கும் போக்குவரத்துக்
கழகங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதில்,
78.30 சதவிகித பேருந்துகள் காலாவதியான பின்பும் இயக்கப்படுகின்றனவாம். மூன்றாம்
இடத்தில் இருக்கும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 72.71 சதவிகித
காலாவதியான பேருந்துகள் இருப்பதாகவும் தரவுகள் சொல்கின்றன.
20,324 வாகன பதிவு காலாவதியான பின்பு
இயக்கப்படும் மொத்த அரசு பேருந்துகளின் எண்ணிக்கை.
சென்னை
போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 3,688 பேருந்துகள் உள்ளன. இதில், 2,681
பேருந்துகள் காலாவதியானவை. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இதர 31
மாவட்டங்களில் 22,533 பேருந்துகள் உள்ளன. இதில் 17,643 பேருந்துகள்
காலாவதியாகிவிட்டன. ஒரு பேருந்தின் FC கட்டணம் 25,000 ரூபாய். ஒரு பேருந்தை FC
செய்யும் முன்பு பழுது பார்க்க 75,000 ரூபாய் குறைந்தபட்சம் செலவாகும். மொத்தமாக
ஒரு வாகனத்துக்குத் தமிழக அரசுக்கு 1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியது
வரும். காலாவதியான 20,324 பேருந்துகளுக்குச் சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் 203 கோடி
ரூபாய் செலவுகள் தமிழ்நாடு அரசுக்குக் கூடுதலாக ஏற்படும்.
இந்த
நெருக்கடியை தமிழக அரசு தவிர்க்கவே பார்க்கும். இதனால், புதிய பேருந்துகளின்
எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு பேருந்துகள் மட்டுமல்ல, தனியார் பேருந்துகள்,
தனியார் டிரக் மற்றும் டாக்ஸி வாகனங்களும் அதிகளவில் புதிதாக மாற்றப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக