இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram:
pudhiya.podiyan
Contact us :
oorkodangi@gmail.com
அஹமதாபாத், குஜராத் : அமேசான் என்கிற இ காமர்ஸ்
கடல் வழியாக, இந்தியாவில் பலரும் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களோடு
கொஞ்சம் பெரிய அளவில் வியாபாரம் செய்யும் நிறுவனம் தான் இந்த அப்பரியோ ரீடெயில்
லிமிடெட்.
சமீபத்தில் குஜராத்தில் இருந்து ஒரு
வாடிக்கையாளர், அமேசான் வழியாக, ஒரு ஹெச் டி எம் ஐ (HDMI - High-Definition
Multimedia Interface) கேபிளை ஆர்டர் செய்து இருக்கிறார். இவர் ஆர்டர் செய்த ஹெச்
டி எம் ஐ கேபிளின் நீளம் 20 மீட்டர்.
வாடிக்கையாளரின் ஆர்டருக்கு பொருளை அனுப்பியது,
அப்பரியோ ரீடெயில் தான். 20 மீட்டர் நீள கேபிள் தான் ஆர்டர் செய்தது. ஆனால் ஆர்டர்
செய்த வாடிக்கையாளருக்கு கிடைத்ததோ வெறும் 19 மீட்டர் ஹெச் டி எம் ஐ கேபிள் தான்.
பாக்கி ஒரு மீட்டர் கேபிளைக் காணவில்லை என
குஜராத் அரசு அளவை அமைப்பிடம் (Controller of Legal Metrology - Gujarat) புகார்
கொடுத்து இருக்கிறார். குஜராத்தில் பாவ்லா கிராமத்தில் தான் அப்பரியோ ரீடெயில்
இருக்கின்றன. அங்கு இருந்து தான், ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கான கேபிள்
அனுப்பப் பட்டு இருக்கிறது.
புகாரை வாங்கிக் கொண்ட அரசு தரப்பினர், திடீரென
எதிர்பாராத நேரத்தில், பாவ்லா கிராமத்தில் இருக்கும் அப்பரியோ ரீடெயில் கடையில்
சோதனை செய்து இருக்கிறார்கள்.
சோதனையின் போது, 20 மீட்டர் ஹெச் டி எம் ஐ
கேபிள் பாக்ஸை புதிதாக திறந்து அளந்து பார்த்து இருக்கிறார்கள். 19 மீட்டர் தான்
இருந்து இருக்கிறது. ஆனால் பாக்ஸில் 20 மீட்டர் என தவறாக குறிப்பிடப்பட்டு
இருக்கிறது. அதோடு கேபிள் பாக்ஸில் அந்த கேபிள் எந்த நாட்டில் இருந்து இறக்குமதி
செய்யப்பட்டது, யார் இறக்குமதி செய்தார்கள், இறக்குமதி செய்தவர்களின் விலாசம்
போன்ற விவரங்களும் இல்லையாம்.
எனவே இது அளவீட்டுச் சட்டங்கள் படியும்,
பொருட்களை பாக்கெட் செய்யும் விதிகள் படியும் தவறாம். எனவே இந்த இரண்டு
தவறுகளையும் குறிப்பிட்டு ஒரு கணிசமான தொகையை, அப்பரியோ ரீடெயிலுக்கு அபராதமாக
விதித்து இருக்கிறார்களாம். அதோடு குறிப்பிட்ட அளவை விட குறைந்த நீளம் உள்ள
கேபிள்களையும் பறிமுதல் செய்துவிட்டார்களாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக