Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 23 நவம்பர், 2019

ஷாக் தரும் அமேசான்.. காசே கொடுக்காமல் பொருட்களை எடுத்துச் செல்லலாம்.. எப்படி சாத்தியம்!

Image result for amazon go

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


முதல் அமேசான் கோ ஸ்டோர் தொடங்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்ட நிலையில், இன்றுவரை இதுபோன்ற 16 விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன, அங்கு ஷாப்பிங் வருபவர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு காசு கொடுக்காமல் கடையை விட்டு வெளியேறலாம். இது எப்படி சாத்தியம், எந்த முறையில் அமேசான் பணம் வாங்குகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
மக்கள் பொருட்களை வாங்கும் முறையை முற்றிலும் மாற்றி வரும் இ-காமர்ஸ் நிறுவனமான ஜெஃப் பெசோஸின் அமேசான், அமேசான் கோ கடைகளை திறப்பதன் மூலம் சில்லறை விற்பனை துறையில் மிகப்பெரிய முன்னேறி வருகிறது.
முதல் அமேசான் கோ ஸ்டோர் தொடங்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்ட நிலையில், இன்றுவரை இதுபோன்ற 16 விற்பனை நிலையங்கள் மட்டுமே உள்ளன, அங்கு கடைக்கு வருபவர்கள் ஒரு செக்-அவுட் கவுண்டரில் பணம் செலுத்தாமல் பொருட்களை எடுத்துக்கொண்டு கடையை விட்டு வெளியேறலாம்.
கணக்கில் கழியும்
என்னது அமேசான் இலவசமாக பொருட்களை வழங்குவதாக நீங்கள் நினைக்க ஆரம்பிக்கலாம், ஆனால் உண்மையல்ல. இந்த கோ கடைகள் முற்றிலும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, நீங்கள் வாங்கும் அனைத்து பொருட்களின் குறிப்பை எடுத்துக்கொள்ளும்.நீங்கள் கடையை விட்டு விலகியவுடன் உங்கள் அமேசான் கணக்கிலிருந்து தொகையை கழித்துக்கொள்ளும்.
பணம் மட்டும் காலியாகும்
என்ன கேட்கவே ஆச்சர்யமாக உள்ளதா ஆம். கடையில் பொருட்களை விற்க யாரும் இருக்கமாட்டார்கள். சேல்ஸ் கவுண்டரிலும் யாரும் இருக்கமாட்டார்கள். நீங்கள் கடையை விட்டு வெளியேறிய உடன் உங்கள் கணக்கில் இருந்து பணத்தை அமேசான் எடுத்துக்கொள்ளும்.
அக்கவுண்டர்கள்
இந்த நவீன கோ கடைகளுக்கு விற்பனை பிரதிநிதிகள் தேவையில்லை. அக்கவுண்டர்கள் தேவையில்லை. ஏன் யாருமே தேவையில்லை. எல்லாமே மிஷின்களை வைத்து முடித்துவிட முடியும். ஆனாலும் இப்போதைக்கு பொருட்களை எடுத்துவைப்பதற்கு மட்டும் மனிதர்களை வைத்துள்ளது அமேசான்.
2.0 கடைகள்
வழக்கமான சில்லறை கடைகளின் பாணியில் வடிவமைக்கப்பட்ட, அமேசான் கோ கடைகள் சூப்பர் மார்க்கெட்டுகளின் மேம்படுத்தப்பட்ட வெர்சன்கள் அதாவது சூப்பர் மார்க்கெட் 2.0 ஆகும், அங்கு வாடிக்கையாளர்கள் கடைக்குள் செல்லலாம், அவர்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்துவதற்கு காத்திருக்காமல் வெளியேறலாம். வாயிலுக்குள் நுழையும் நேரத்தில், அவர் தங்கள் அமேசான் ஐடியை கணக்கிலிருந்து ஸ்கேன் செய்ய வேண்டும், கட்டணம் செலுத்தாமல் வெளியேறலாம்.
விரும்பியதை எடுக்கலாம்
வழக்கமான சில்லறை கடைகளின் பாணியில் வடிவமைக்கப்பட்ட, அமேசான் கோ கடைகள் சூப்பர் மார்க்கெட்டுகளின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகள் ஆகும், அங்கு வாடிக்கையாளர்கள் கடைக்குள் செல்லலாம், அவர்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்துவதற்கு காத்திருக்காமல் வெளியேறலாம். வாயிலுக்குள் நுழையும் நேரத்தில், ஒருவர் தங்கள் அமேசான் ஐடியை கணக்கிலிருந்து ஸ்கேன் செய்ய வேண்டும். அப்படியே வெளியேறலாம்.
என்ன தொழில்நுட்பம்
எப்படி சாத்தியம் என்பது அறிய நமக்கு இந்த கடைசி வரிகள் கொஞ்சம் படிப்பதற்கே கஷ்டமாக இருக்கும் இருந்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஆமாம், அதாவது செக்அவுட்கள் இல்லை, வரிசையில் நிற்கவே வேண்டாம், பணத்தை கொண்டு வர தேவையில்லை. அமேசானின் விளம்பர வீடியோவின் படி, "கடைகள் கணினி பார்வை, ஆழமான கற்றல் வழிமுறைகள் மற்றும் சென்சார் இணைவு போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
சென்சார் இணைவு
அமேசான் நிறுவனம் இதுபற்றி கூறுகையில் "எங்கள் செக்அவுட் இல்லாத ஷாப்பிங் அனுபவம் சுய-ஓட்டுநர் (self-driving cars) கார்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களான கணினி பார்வை, சென்சார் இணைவு மற்றும் ஆழமான கற்றல் போன்றவைகளால சாத்தியமாகி உள்ளது.
மெய்நிகர் வண்டி
பொருட்களை நீங்கள் எடுக்கும் போது அல்லது அலமாரிகளில் அடுக்கப்பட்ட பொருட்களுக்கு (ரேக்குகளில்) திரும்பும்போது எங்களின் ஜஸ்ட் வாக் அவுட் தொழில்நுட்பம் தானாகவே கண்டறிந்து அவற்றை ஒரு மெய்நிகர் வண்டியில் (virtual cart) கண்காணிக்கும்" என்று தெரிவித்துள்ளது.
அனைத்தும் வாங்கலாம்
இந்த கடைகளில் தற்போது தயாரிக்கப்பட்ட உணவு, ஆல்கஹால் மற்றும் மளிகை போன்ற பொருட்களை வாங்க முடியும். நீங்கள் கடையில் எடுத்த அல்லது கைவிட முடிவு செய்த பொருட்களைக் கண்டறியவும் முடியும், பின்னர் உங்கள் அமேசான் கணக்கில் இருந்து தானாகவே பணத்தை கழித்து கொள்ளும், நீங்கள் எடுத்த பொருட்களை மீண்டும் வைக்காவிட்டாலும், இதேபோல் உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து பொருட்களை வாங்கினாலும் இந்த தொழில்நுட்பம் செயல்படுகிறது.
ஸ்மார்ட் போன்
இருப்பினும், அமேசான் கோ கடைகளை ஷாப்பிங் செய்ய வேண்டும் என்றால் ஸ்மார்ட்போன்கள் இருக்க வேண்டும் அத்துடன் அமேசான் கணக்குகள் இருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாதவர்கள் இந்த கடைகளில் ஷாப்பிங் செய்ய முடியாது.
போட்டி நிறுவனங்கள்
இப்போதைக்கு, அமேசானின் கோ கடைகள் அமெரிக்காவின் மிகவும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் உள்ளன, தற்போதைக்கு அந்த நிறுவனம் இன்னும் சோதனைக் கட்டத்தில் உள்ளது, மேலும் வாடிக்கையாளர் அனுபவத்தையும் தொழில்நுட்பத்தையும் இன்னும் சிறப்பாக எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொண்டு வருகிறது. இருப்பினும், அமேசான் நிறுவனம் ஏற்கனவே சிகாகோவில் மூன்று புதிய இடங்களிலும் நியூயார்க்கில் இரண்டு புதிய ஸ்டோர் இடங்களையும் அறிவித்துள்ளது. இதற்கிடையில், அமேசானின் தொழில்நுட்ப பாயச்சலால் அதிர்ச்சி அடைந்துள்ள வால்மார்ட் மற்றும் செவன்-லெவன் போன்ற போட்டியாளர்களும் இதேபோன்ற ஒன்றை உருவாக்கத் தொடங்கியுள்ளனர்
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக