Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 19 நவம்பர், 2019

பூவராக சுவாமி திருக்கோவில் ஸ்ரீமுஷ்ணம்

 Image result for பூவராக சுவாமி திருக்கோவில் ஸ்ரீமுஷ்ணம்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com 


பெருமாளின் பத்து அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வராக அவதாரம். அந்த சிறப்பு வாய்ந்த அவதாரத்துடன் கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் எனும் ஊரில் பூவராக திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார் பெருமாள்.

மூலவர் - ஸ்ரீபூவாரகன்

உற்சவர் - ஸ்ரீயக்ஞ்வராகன்

அம்மன் - அம்புஜவல்லி

தல விருட்சம் - அரசமரம்

தீர்த்தம் - நித்யபுஷ்கரணி

மாவட்டம் - கடலூர்

தல வரலாறு :

 முன்னொரு காலத்தில் நாராயணன் மிகப் புனிதமான வராக அவதாரம் எடுத்து, பூமியைக் கவர்ந்து சென்ற ஹிரன்யாஹூசன் என்னும் அசுரனை கொன்று, அப்பூமியை தனது கோரைப் பற்களினால் சுமந்து வந்து, அதிஷேஷன் மேல் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். அச்வத்த விருஷத்தையும், துளசியையும் உண்டாக்கி, தனது வியர்வை நீரின் பெருக்கை கொண்டு நித்யபுஷ்கரணி என்ற புனித தீர்த்தத்தையும் ஏற்படுத்தி, ஸ்ரீமுஷ்ணம் என்னும் இத்தலத்தை இருப்பிடமாக ஏற்று பிரம்மன் முதலானோர் பூஜிக்க ஸ்ரீபூவாராகவன் என்ற திருநாமத்துடன், பக்தர்களுக்கு அருள்பாலிப்பவராக இத்திருக்கோவிலில் எழுந்தளியுள்ளார்.

 பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஒரு ஊரை ஆண்டு வந்தார். அவருக்கு தீராத வியாதி ஏற்பட்டது. வைத்தியர்கள் அவரை கைவிட்ட நிலையில், இக்கோவில் வழியாக ஆதி நவாப் செல்லும் போது, ஒரு பக்தன் தான் வைத்திருந்த பெருமாளின் தீர்த்ததையும், பிரசாததையும் கொடுத்தான். அதை சாப்பிட்ட ஆதி நவாப் பூரண குணமடைந்ததார். அது முதல் அவர் பெருமாளின் பக்தனாக மாறினார். அதுமட்டுமில்லாமல் கோவிலுக்காக நிறைய நிலங்களை எழுதி வைத்தார்.

தல பெருமை :

 இங்கு பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 அசுரர்களை வென்றதால் ஏற்பட்ட வெற்றிப் பெருமித உணர்ச்சி பொங்க இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக பார்க்கிறார்.

 இங்கு பெருமாளின் மூலவர் விமானம் பாவன விமானமாகும்.

 பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் இங்கு வழிபட்டு நற்பலன் அடைந்தனர். பன்றி வடிவில் சுவாமி இருப்பதால் அவருக்கு விருப்பமான கோரைக்கிழங்கு நைவேத்யம் செய்யப்படுகிறது.

பிராத்தனை :

 பூவராக பெருமாளை வணங்கினால் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, மக்கட்பேறு, நிலைத்த செல்வம், நீண்ட ஆயுளைப் பெற்று இந்த வையகத்தில் வாழலாம்.

குரு, ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கினால் அந்த தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும்.

 தங்களின் பிரார்த்தனை நிறைவேறிய பின் பக்தர்கள் பெருமாளுக்கு பக்தர்கள் துளசி மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக