இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நீலகிரி மலையை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்து சிறப்பித்துள்ளது. அதில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் கல்லட்டி நீர்வீழ்ச்சியும் ஒன்று.
மனதை மயக்கும் ஓர் அழகிய ஊர். கல்லட்டி நீர்வீழ்ச்சியில் காணப்படும் அருவி, கோடை வெயிலில், சுற்றுலா பயணிகளுக்கு இதமளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், ஊட்டியிலிருந்து-தெப்பக்காடு, மைசூர் செல்லும் சுற்றுலா பயணிகளும், தெப்பக்காடு, மைசூர் பகுதிகளிலிருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளும், கல்லட்டி நீர்வீழ்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
பைகாரா ஏரி, கல்லட்டி அருவி, தெப்பக்காடு யானை முகாம் என்று முதுமலைக்கு அருகில் சுற்றிப் பார்க்கவும் ஏராளமான இடங்கள் உண்டு.
இந்த நீர்வீழ்ச்சி, பறவைகளை பார்வையிட விருப்பமுடையவர்களுக்கு சொர்க்கமான இடமாக விளங்குகிறது.
இதன் சுற்றுப்புறங்கள் அமைதியான மற்றும் இயற்கையான சூழலை கொண்டுள்ளதால், இது சிறு பயணம் செல்ல சிறந்த இடமாக உள்ளது.
பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் இடமாக கல்லகட்டி நீர்வீழ்ச்சி உள்ளது.
முதுமலை மற்றும் மசினகுடி பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கு சென்று இளைப்பாறுவது மட்டுமின்றி, புகைப்படங்கள் எடுத்துச் செல்வது வழக்கம்.
எப்படி செல்வது?
நீலகிரியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
நீலகிரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
பைகாரா அணை
சாந்தி நல்லா நீர்த்தேக்கம்
எமரால்டு ஏரி
கூடலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா.
கொடநாடு காட்சி முனையம்.
டால்பின் மூக்கு.
ஜீன்பூல் சூழல் பூங்கா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக