Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 2 நவம்பர், 2019

குளியலறையில் வழுக்கி விழுந்த காமெடி நடிகர் காலமானார்..!!

குளியலறையில் வழுக்கி விழுந்த காமெடி நடிகர் காலமானார்..!!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



காமெடி நடிகரான ஜெயச்சந்திரன் தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். 66 வயதாகும் ஜெயச்சந்திரனுக்கு சர்க்கரை நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு படப்பிடிப்புக்குச் சென்று வீடு திரும்பிய ஜெயச்சந்திரன் மறுநாள் காலை பாத்ரூமுக்குச் சென்ற போது நிலை தடுமாறி வழுக்கி விழுந்துள்ளார்.
 
இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு மயக்கமடைந்துள்ளார்,உடனே அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. ஜெயச்சந்திரனுக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.
நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஷால், பொன்வண்ணன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனை அடுத்து வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சமீபத்தில் ஷூட்டிங்கில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகர் மரணமடைந்தது இதனை கண்டு திரைத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!