
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!
கடந்த பதிவில், தன்னிச்சை எழுத்துக்கள் எழுதும் ஒருவரின் எழுத்து விஞ்ஞானிகளைக் குழப்பியது, எனக் கூறி வாசகர்களைக் குழப்பியிருந்தேன். அதன் விளக்கங்கள் இப்பதிவில்
கடந்த பதிவில், தன்னிச்சை எழுத்துக்கள் எழுதும் ஒருவரின் எழுத்து விஞ்ஞானிகளைக் குழப்பியது, எனக் கூறி வாசகர்களைக் குழப்பியிருந்தேன். அதன் விளக்கங்கள் இப்பதிவில்
கடந்த பதிவில் நாம் கண்ட
கிறிஸ்டல் பந்து ஞானிகள் /ஆவித்தொடர்பியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர் அமெரிக்காவிலுள்ள சிகாகோ மாகாணத்தைச்
சேர்ந்த ஜோசப் டிலூயிஸ் (Joseph Delouise). 1969-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி, ஒரு
ஓட்டலின் பாரில் நுழைந்த ஜோசப், அங்கிருப்பவர்களிடம் பேப்பரில் ரயில் விபத்துகுறித்து
ஏதேனும் செய்தி பிரசுரமாகியுள்ளதா எனக் கேட்டார். அப்படியேதும்,வரவில்லை என அங்கிருப்பவர்கள்
தெரிவிக்க அவர்களிருக்குமிடத்திலிருந்து தெற்கில் பனிமூட்டம் காரணமாக இரு ரயில்கள்
மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்தார். இருப்பினும், அவரைச் சூழ்ந்திருந்த வழக்கமான
மக்கள், சற்று வித்தியாசமாகவே அவரை நோக்கினர். வானொலியை அலைவரிசைக்கிரமமாய்த் திருப்ப,
இரவு பதினொரு மணியளவில் கூட அவ்விபத்துகுறித்து எத்தகவலும் இல்லை. இரண்டுமணிநேரம் கழித்து
(அதாவது இரவு ஒரு மணிக்கு) 'சற்றுமுன் கிடைத்த செய்தி, சிகாகோவிற்குத் தெற்கே,
இல்லினாய் சென்ட்ரல் ரயில்கள் இரண்டு, பனியில் மோதிக்கொண்டன. 3 பேர் இறந்துபோனார்கள்,
43 பேர் படுகாயமடைந்தார்கள்' என செய்தி வந்தது. அன்றிலிருந்து எதிர்வரப்போகும்
விபத்துகள் பற்றி பேசினார்; அவற்றில் பல பலித்தன. இத்தகு சக்திவாய்ந்த ஜோசப், மாபெரும்
மாந்த்ரீக வித்தைகளில் கைதேர்ந்த மந்திரவாதியாக இருப்பார் என்கிற உங்களின் கற்பனைகளை
சுக்குநூறாக உடைக்கும் வண்ணம் இவர் எட்டாவதிற்கு மேல் படிக்காத, ஒரு சாதாரண முடிதிருத்தும்
கலைஞர்!
| ஜோசப் டிலூயிஸ் |
இவர் தனது ஆரூடங்கள் குறித்து
பின்னாளில், "சைக்கிக்
மிஷன்" (Psychic Mission) என்கிற பெயரில் ஒரு புத்தகமும்
எழுதியுள்ளார். இவரைப் போன்ற கிறிஸ்டல் பந்து ஞானிகள் பலரும், தங்களை இயக்குவது
ஒரு அமானுஷ்ய (நல்ல) ஆத்மாவே என்றே தெரிவிக்கின்றனர்.

நமது முந்தைய பதிவில் கண்ட தன்னிச்சையான எழுத்துகள் மூலம்
அவைகளைத் தொடர்புகொள்பவர்களுள் சற்று வினோதமானவர் ஹெலன்
ஸ்மித் (Helen Smith) என்கிற பெண்மணி.
தனது அனிச்சை எழுத்துகள் மூலம் செவ்வாய்க்கிரகவாசிகள் நம்மோடு
தொடர்புகொள்கிறார்கள் என்கிற பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது எழுத்துகள்
இதுவரையிலான உலக மொழிகள் எவற்றொடும் ஒத்துப்போகவில்லை. பண்டைய பிரெஞ்சு மொழியோடு
ஓரளவிற்கு ஒத்துப்போனது. இவர் பிரெஞ்சுப் பிரஜையாக இருந்தாலும், முற்கால
பிரெஞ்சின் எழுத்து வடிவத்தை காகிதத்தில் வடித்தது, இன்றுவரை விடைபகரவியலா
மர்மமே...! (அப்போ செவ்வாய்க்கிரகவாசிங்க நம்மளோட பேச முயற்சி பண்றாங்களா?)
எழுத்துகள் மட்டுமல்லாது சில படங்களையும் தன்னிச்சையாக வரைந்தார். மேலும்
ஹெலன், மறுபிறப்பெடுத்துள்ள இந்து மதத்தைச் சார்ந்த ஒரு இளவரசியுடனும் (அவரின்
பெயர் தெரியவில்லை. 5 நாட்களாகத் தேடுகிறேன்!), ஆஸ்திரியாவில் பிறந்த பிரெஞ்சு
ராணியான மேரி அன்டௌனெட்டுடனும் (Marie Antoinette) (ஆவியுலகத்) தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
| ஹெலன் ஸ்மித் |
![]() |
| ஹெலன் ஸ்மித்தின் அனிச்சை எழுத்துகள் |
| 'செவ்வாய்க்கிரகவாசிகளின் எழுத்துகளுக்கு இணையான ஆங்கில எழுத்துகள்' என ஹெலனால் விளக்கப்பட்ட எழுத்துகள் |
| ஹெலன் ஸ்மித்தின் அனிச்சை ஓவியம் |
பின்னர், 'உளவியலின் தந்தை' என
அழைக்கப்படும், சிக்மண்ட் பிராய்டின் (Sigmund Freud) சமகாலத்தவரான, தியோடர்
ஃப்ளோர்னோய் (Theodore Flournoy) என்கிற
உளவியல் பேராசிரியரால், 1899-ல், ஹெலனைக் குறித்து எழுதி வெளிவந்த "இந்தியாவிலிருந்து செவ்வாய்க்கிரகத்திற்கு" (From
India to the planet Mars) என்கிற நூல், ஹெலனை மேலும் பிரபலமாக்கியது.
(அது ஏன் குறிப்பாக இந்தியா, என்பதை அப்புத்தகத்தை வாசித்தால் மட்டுமே
அறிந்துகொள்ள முடியும்.)
![]() |
| தியோடர் ஃப்ளோர்னோய் |

அதெப்படி
செவ்வாய்க்கிரகவாசிகள் இப்படி தொடர்புகொள்ள இயலும்? ஒரு மனிதன் எவ்வாறு
வருங்காலத்தைக் கணிக்க இயலும்? என பலவாறு குழம்பும் உங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி
என்னவெனில், இதைவிடவும் ஆச்சர்யமான நபரொருவர் இருக்கிறார். ஆவிகளின் துணையால்
அறுவைசிகிச்சை செய்தவர், என உலகளவில் அறியப்பட்டவர். அவர் குறித்து அடுத்த
பதிவில்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக