Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 டிசம்பர், 2019

காதலன் தன்னை கைவிட்டதால் அவரின் திருமணத்தை நிறுத்த, குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொன்ற காதலி.!

காதலன் தன்னை கைவிட்டதால் அவரின் திருமணத்தை நிறுத்த, குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொன்ற காதலி.!


ண்டிகர் தலைநகரத்தின்பஞ்சாப் மாநிலம், கபூர்தலா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் மன்பிரீத் கவுர், மற்றும் அசோக் என்ற வாலிபரும் சில ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்தனர். இந்நிலையில், அசோக்குக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால், அவர் கவுரை விட்டு விலகினார். நான் திருமணம் செய்ய ஆசைப்பட்ட காதலன், தன்னை உதறி தள்ளியதால் கவுர் ஆத்திரம் அடைந்தார். அவரது திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டமிடமிருந்தார்.
இந்நிலையில், அசோக்கின் திருமணத்துக்காக அவருடைய அக்கா குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். அப்போது, அக்காவின் குழந்தையான 2 வயது ஆதிராஜ். அவருடைய சகோதரன் மற்றும் மேலும் ஒரு சிறுமியும் கவுரின் வீட்டில் விளையாட சென்றனர். சகோதரனும், சிறுமியும் வீடு திரும்பிய நிலையில், ஆதிராஜ் திரும்பி வரவில்லை. இதனால், குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கவுரின் வீட்டிற்குள் விளையாட சென்ற மூவரில் ஆதிராஜ் மட்டும் திரும்பவில்லை என்பது தெரிந்தது.
பின்னர், கவுரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காதலன் தன்னை கைவிட்டதால் அவருடைய திருமணத்தை நிறுத்த, குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொன்றதாக தெரிவித்தார். இதையடுத்து, வாஷிங் மெஷினிலிருந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் எடுத்து சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கவுரை போலீசார் கைது செய்தனர். இந்த கொடுமையான சம்பவத்தில் அப்பகுதி முழுக்க மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக