Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 டிசம்பர், 2019

அனைத்து லாட்டரிகளுக்கும் 28 சதவீத ஜி.எஸ்.டி.!!

அனைத்து லாட்டரிகளுக்கும் 28 சதவீத ஜி.எஸ்.டி.!!
னைத்து லாட்டரிகளுக்கும் 28 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
டெல்லியில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், அரசு லாட்டரி, தனியார் லாட்டரி என அனைத்து வகை லாட்டரிகளுக்கும் அதிகபட்ச வரிவிகிதமான 28 சதவீத வரி விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய வரிவிகிதம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது.
நெய்யப்பட்ட பை மற்றும் நெய்யப்படாத பைகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. மவ்லும் தொழிற்பூங்கா அமைக்க வசதியாக தொழிற்சாலை மனைகளுக்கான நீண்டகால குத்தகைக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டது.இந்த தகவல்களை வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே நிருபர்களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக