பெற்ற மகளை கொன்று துண்டு துண்டாக வெட்டிய கொடூர
தந்தை. வேற்று சமூக ஆணை காதலித்தது பிடிக்காமல் மகளை கொன்றதாக விசாரணையில்
தகவல்.
தானே
ரயில் நிலையத்தில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது மகளை வெட்டி ஒரு
பையில் வைத்து வேறு இடத்தில் வீசிவிட ஆட்டோவில் எறியுள்ளார். பையில் துர்நாற்றம்
அடிக்கிறது என ஆட்டோக்காரர் சந்தேகத்துடன் கேட்க உடனே அங்கிருந்து தப்பிவிட்டார்
அந்த நபர்.
அந்த
ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில், வீசிச்சென்ற அந்த பையை போலீசார்
ஆராய்ந்தனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் தலையில்லாமல் இருந்துள்ளது. பிறகு அந்த
நபரை தீவிரமாக தேடிய போலீசார் 30 மணிநேரத்தில் அந்த நபரை கைது செய்தனர்.
அந்த
நபரிடம் விசாரித்தபோது, அந்த நபர் பெயர் அரவிந்த் திவாரி எனவும், அவர் தனியார்
கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார் எனவும், அவர்க்கு 4 பிள்ளைகள் இதில் முதல்
பிள்ளை பெயர் பிரின்சி. இவர் வேற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து
வந்துள்ளார்.
அது
திவாரிக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் பிரச்சனை எழுந்துள்ளது.
சம்பவத்தன்று சண்டை பெரியதாகி, கத்தியால் பிரின்சியை சரமாரியாக குத்தி
கொன்றுள்ளார். பின்னர் அவரது துண்டுதுண்டாக வெட்டி பையில் போட்டு பிவண்டி என்ற
இடத்தில் வீசுவதற்காக, தானே ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.
அப்ப்போதுதான் ஆட்டோ ஓட்டுனரின் சந்தேகத்தின் பெயரில் இந்த கொடூர குற்றவாளி திவாரி
சிக்கி கொண்டார். இவை அனைத்தும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக