பல்லாயிரம்
கோடி பெரும் கடனில் சிக்கி தவித்து வந்த நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள்
இனி தங்களால் இந்தக் கடன் சுமையைத் தாங்க முடியாது என ஒரு வழியாக கட்டண
உயர்வை அறிவித்துள்ளனர். ஏற்கனவே நாட்டில் முன்னணி தொலைத் தொடர்ப்பு
நிறுவங்களாக ஏர்டெல், வோடபோன், ஆகிய நிறுவங்கள் தங்களது புதிய கட்டணத்தை
அறிவித்துவிட்ட நிலையில் இன்று ஜியோ தனது கட்டணத்தை அறிவித்துள்ளது.
This is @reliancejio new all-in-one plan effective from
December 6th #Jio #jionewplans pic.twitter.com/vCmn0WxiJi
— Boo (@Boo_TechYT) December 4, 2019
ஏர்டெல், வோடபோன், ஆகிய நிறுவங்கள்,
வரும் 6 ஆம் தேதி முதல் தங்களின் புதிய கட்டண உயர்வை அமல்படுத்த உள்ளன. இந்தக்
கட்டண உயர்வானது, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தொலைத் தொடர்பு நிறுவனங்களால்
அமல்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது.
வரும் 6 ஆம் தேதி தனது புதிய
கட்டணத்தை வெளியிடுவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருந்த நிலையில், இன்று,
தனது புதிய கட்டண விவரத்தை அறிவித்துள்ளது.
மேலும், மற்ற நொட்வொர்க்கில்
இல்லாத வகையில் NEW ALL IN ONE PLANS" என்ற புதிய திட்டத்தையும் ரிலையன்ஸ் ஜியோ
அறிமுகப்படுத்தி உள்ளது. அதில், ஒரு மாதத்திற்கு ரூ.199, ரூ.249,ரூ. 349 ஆகிய பிளான்களில்
சேவை கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக