நாட்டில் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் மையமாக்கல் என்பது
துளிர்விடத் தொடங்கியுள்ள நிலையில், தொழிலாளர்கள் தங்களது பிஎஃப் பணத்தை திரும்ப
பெறும் முறையிலும் சில வசிதிகளை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
தற்போது ஊழியர்களின் வருங்கால நிதி
அமைப்பான வருங்கால வைப்பு நிதி ஆணையத்திலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளது.
அதாவது உங்கள் விரல் நுனியில்
இருந்தே, வருங்கால வைப்பு நிதியை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கான சிறந்த வசதி
உங்களது பிஎஃப் தொகையை நீங்கள் இதற்கு
முன்னர் பணி புரிந்த நிறுவனத்திலிருந்து வாங்க முடியாமல் தவித்து வந்தால், இந்த
செய்தி உங்களுக்கானதே. ஊழியர்களின் வருங்கால நிதி அமைப்பான வருங்கால வைப்பு நிதி
ஆணையம் ஒருங்கிணைந்த போர்டல் வசதியை செய்துள்ளது. இதில் பணியாளர்கள் முன்போ அல்லது
கடைசியாகவோ பணி புரிந்த நிறுவனத்திலிருந்து வெளியேறும் தேதியை ஊழியர்களே அப்டேட்
செய்யலாம்.
நிறுவனங்களுக்கு மட்டுமே அதிகாரம்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில்
ஊழியர்கள் வெளியேறும் தேதியை, இதுவரை நிறுவனங்கள் மட்டும் பதிவு செய்யும் அதிகாரம்
இருந்தது. இருப்பினும் இனி நிறுவனமோ அல்லது அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்னர்
ஒரு பணியாளர் கூட இந்த வெளியேறிய தேதியை பதிவு செய்து கொள்ளலாம். இது பணி புரியும்
ஊழியர்களுக்கு ஒரு நல்ல விஷயமாகும்.
தாமதங்களுக்கு முற்றுபுள்ளி
சில நேரங்களில் முதலாளிகள் தங்கள்
பதிவுகளில் ஊழியர்கள் வெளியேறும் தேதியை புதுபிக்க மாட்டார்கள். மேலும் சில
நேரங்களில் முந்தைய நிறுவனமோ அல்லது ஊழியர்கள் பணி புரிந்த இடத்தில் வெளியேறும்
தேதி இல்லை எனில், திரும்ப பெறுதல் மற்றும் பரிமாற்றம் உள்ளிட்ட பிஎஃப் உரிமை
கோரல்களை தீர்ப்பதில் தாமதமாகலாம். இதனால் இந்த நடவடிக்கையானது இதற்கெல்லாம்
முற்றுப்புள்ளியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
தேதியை மாற்ற என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் இதில் நுழைய வேண்டுமெனில் UAN
போர்டலில் உள்நுழைய வேண்டும். இங்கு உங்களது யுனிவர்சல் கணக்கு எண் மற்றும்
பாஸ்வேர்டை கொடுத்து உள்நுழைய வேண்டும். அங்கு நீங்கள் ஒரு நிறுவனத்திலிருந்து
வெளியேறும் தேதியை பதிவு செய்யும் முன்பு, வெளியேறும் தேதி ஏற்கனவே பதிவு
செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அதை சரிபார்க்க சர்வீஸ் ஹிஸ்டிரி
(Service History) என்பதை கிளிக் செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
எப்படி தேதியை கொடுப்பது?
UAN பேனலில் எனது கணக்கு (My Account)
என்பதை செய்து, அதன் கீழ் உள்ள Mark Exit என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
இதற்கடுத்தாற்போல் நீங்கள் தேதி பதிவு செய்ய வேண்டிய நிறுவனத்தினை க்ளிக் செய்து,
அதில் நீங்கள் பிறந்த தேதி, வேலைக்கு சேர்ந்த தேதி, நீங்கள் அந்த
நிறுவனத்திலிருந்து வெளியேறிய தேதி உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும்.
தேதியை எப்படி கொடுப்பது?
இங்கே நீங்கள் வெளியேறிய தேதியை
பதிவிட, நீங்கள் ஒரு நிறுவனத்திலிருந்து வெளியேறிய கடைசி பங்களிப்பு
மாதத்திலிருந்து எந்த தேதியை வேண்டுமானாலும் நீங்கள் தேர்தெடுக்கலாம். நீங்கள்
கடைசி மாதத்தினை அறிய, மேல் குழுவில் உள்ள தகவல்களை EPFO வழங்குகிறது. அதில்
மெம்பர் ஐடி, ஸ்தாபனத்தின் பெயர், கடைசியாக நீங்கள் வேலை செய்த மாதம் உள்ளது. ஆக
அதை வைத்து நீங்கள் உங்களது வெளியேறிய தேதியை பதிவு செய்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக