Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 30 ஜனவரி, 2020

ஹைதராபாத்தில் கல்விக்கூடம் தொடங்கிய நடிகை சமந்தா!

ஹைதராபாத்தில் கல்விக்கூடம் தொடங்கிய நடிகை சமந்தா! 

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது நண்பர்களுடன் சேர்ந்து ஹைதராபாத்தில் பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. சென்னையைச் சேர்ந்த இவர் 2010ஆம் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் படிப்படியாக முன்னேறி இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஜய், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்த அவர், கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிப்பை தாண்டி சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வரும் சமந்தா, சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை ஹைதராபாத்தில் ஆரம்பித்துள்ளார். இந்த பள்ளி ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் இயங்கி வருகிறது. சமந்தாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!